லியோ ஷூட்டிங் ஸ்பாட் லேட்டஸ்ட் க்ளிக்... விஜய்யுடன் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் சென்னையில் இருந்து தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த லியோ டீம், அங்கு ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டனர்.

இந்நிலையில், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லோகேஷ் கனகராஜ் முதல் போட்டோவை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.

 காஷ்மீரில் லியோ டீம்

காஷ்மீரில் லியோ டீம்

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 7 ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட்டில் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் தளபதி 67 என்ற டைட்டிலில் தொடங்கிய இந்தப் படத்தின் தலைப்பு லியோ என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. தாறுமாறன ப்ரோமோ வீடியோவுடன் வெளியான லியோ டைட்டில் அப்டேட் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. முக்கியமாக ப்ளடி ஸ்வீட் என்ற விஜய்யின் பஞ்ச் டயலாக்கை அடிக்கடி ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன், டான்ஸர் வசந்தி ஆகியோர் லியோவில் நடித்து வருகின்றனர். லியோ படம் மீதான எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு தினமும் எதாவது ஒரு அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இன்று காலை லியோ டைட்டில் ப்ரோமோவுக்கான பிஜிஎம் ரெக்கார்ட் செய்த வீடியோவை அனிருத் வெளியிட்டு மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்ஜே ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

 விஜய்யுடன் இணைந்த பிரபலங்கள்

விஜய்யுடன் இணைந்த பிரபலங்கள்

காஷ்மீர், லியோ என்ற ஹேஷ்டேக்கில் லோகேஷ் ஷேர் செய்துள்ள போட்டோவின் நடுவில் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. அதனை சுற்றி விஜய், லோகேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ப்ரதர்ஸ் ஆகியோருடன் கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நிற்கின்றனர். ஏற்கனவே வெளியான தளபதி 67 பூஜை வீடியோவில் கெளதம் மேனனும் மேத்யூ தாமஸும் இல்லையே என ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். அதேபோல் காஷ்மீர் ஷெட்யூலுக்காக சென்னையில் இருந்து கிளம்பிய தனி விமானத்திலும் அவர்கள் இருவரும் இடம்பெறவில்லை. இதனையடுத்து தற்போது லோகேஷ் ஷேர் செய்துள்ள போட்டோவில் கெளதமும் மேத்யூ தாமஸும் விஜய்யுடன் இருப்பது ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்துள்ளது.

 டிவிட்டரில் ட்ரெண்டாகும் லியோ

டிவிட்டரில் ட்ரெண்டாகும் லியோ

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக போட்டோ ஷேர் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜய், ப்ளடி ஸ்வீட், லியோ என பல ஹேஷ்டேக்குகளில் ரசிகர்கள் இந்த போட்டோவை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகி வரும் லியோ, அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. டைட்டில் ப்ரோமோவுடன் லியோ ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளதால் அடுத்தடுத்து அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X