மீண்டும் இணைந்த சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி.. விண்ணைத்தாண்டி வருவாயா 2 வருமா என எதிர்பார்ப்பு!

சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கும் புதிய படம் ஒப்பந்தமாகி உள்ளது.

Recommended Video

சென்னை: சிம்புவுடன் மீண்டும் கைகோர்க்கும் கவுதம்…‘ஹாட்ரிக்’ வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

இருவரது கூட்டணியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மீண்டும் இருவரும் இணைந்துள்ள நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் உருவாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிம்பு – கெளதம் மேனன்

சிம்பு – கெளதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என நடிகர் சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்து உருவாக்கிய இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டுமொரு புதிய படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பார்ட் 2 படங்கள்

பார்ட் 2 படங்கள்

நடிகர் தனுஷும் செல்வராகவனும் மீண்டும் இணைந்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சிம்புவின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் திரைப்படமான விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் வருமா என ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

கார்த்தி டயல் செய்த எண்

கார்த்தி டயல் செய்த எண்

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே கெளதம் மேனன் இயக்க, சிம்பு, திரிஷா நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தின் ஒரே ஒரு காட்சியாக கார்த்தி டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்து தல வில்லன்

பத்து தல வில்லன்

கன்னட திரைப்படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுக்கு வில்லனாக கெளதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது, தனது அடுத்த படத்தை சிம்புவை வைத்தே இயக்க உள்ளார் கெளதம் மேனன்.

புது கதை

புது கதை

ஐசரி கணேசன் தயாரிப்பில் கெளதம் மேனன் சிம்புவை வைத்து இயக்க உள்ள திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என இதுவரை அறிவிக்கப்படவில்லை. சிம்புவின் இந்த புதிய தோற்றத்திற்கு ஏற்ப புதிய ஆக்‌ஷன் கதையைத் தான் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே நாயகி யார்? படத்தின் டைட்டில் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X