ஒரே மஜா தான் போல.. யோகி பாபுவுடன் காரில் ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: யோகி பாபு மற்றும் இயக்குநர் கெளதம் மேனன் காருக்குள் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல இளைஞர்களுக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை எடுத்து விதைத்தவர் தான் கெளதம் மேனன்.

சமீப காலமாக அவர் இயக்கும் படங்கள் சொதப்பி வரும் நிலையில், நடிகராக மாறிய கெளதம் மேனன் மீண்டும் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கெளதம் மேனன் ஜாலியாக யோகி பாபுவுடன் ஃபன் பண்ணுவதை பார்த்த ரசிகர்கள் விரைவிலேயே சூப்பரான அப்டேட் ஒன்று வரப் போகிறது என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

Gautham Menon Yogi Babu Dhruva Natchathiram

சிம்புவை வைத்து மீண்டும் வெந்து தணிந்தது காடு பார்ட் 2வை கெளதம் மேனன் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். என்ன விசேஷம்னு சீக்கிரம் சொல்லுங்க கெளதம் என அவரது ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் கௌதம் மேனன்: மணிரத்னம் ஸ்டைலில் தமிழ் சினிமாவில் புதிய படங்களை இயக்க ஆரம்பித்தவர் கௌதம் மேனன். மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கௌதம் மேனன் காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு, ஜோஷ்வா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் கௌதம் மேனன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் அவர் இயக்கம் படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

துருவ நட்சத்திரம் எப்போது?: கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், சிம்ரன், ரிது வர்மா, டிடி நீலகண்டன் போன்ற பலர் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாக முடியாமல் கிடப்பில் கிடக்கின்றன. அந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என கெளதம் மேனன் போராடி வருகிறார். ஆனால், இன்னமும் அதற்கான எந்த வழியும் பிறந்தது போல தெரியவில்லை என்கின்றனர்.

யோகி பாபுவுடன் காரில் ஆட்டம்: இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் தனது காரை சாலையில் நிறுத்தி விட்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, "மழை வரப்போகுது.. அதோட உங்களுக்கு வேற என்ன வரப்போகுது தெரியுமா?" என கேள்வி எழுப்பி உள்ளார். சீக்கிரமே துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்டை கொடுங்க சார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். யோகி பாபுவை கெளதம் மேனன் இயக்கப் போகிறாரா? என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எது எப்படியோ கெளதம் மேனன் சந்தோஷமா இருந்தா அதுவே போதும் என்றும் அவரது ரசிகர்கள் தரமான அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X