கௌதம் மேனனனுக்கு பாராட்டு விழா.. ஜோடியாக வந்த ஜோதிகா - சூர்யா.. நடனம்லாம் சூப்பர்
சென்னை: தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் கௌதம் மேனன். அவர் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி நேற்றோடு 25 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி நேற்று 'என்னோடு வா வீடு வரைக்கும்' என்ற பெயரில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜோடியாக கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்து மின்னலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். காதல் ஜானரில் அந்தப் படத்தை எடுத்து அழகாக ப்ரெசண்ட் செய்திருந்தார். மாதவன், ரீமாசென், அப்பாஸ், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக கௌதமின் வேலைகளை பார்த்த ரசிகர்களும், திரைத்துறையினரும் கோலிவுட்டுக்கு நம்பிக்கையான இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றும் சொன்னார்கள்.
வரிசையாக ஹிட்டுகள்: மின்னலே வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என அவர் இயக்கிய படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. போலீஸ் சப்ஜெக்ட்டிலும், காதல் சப்ஜெக்ட்டிலும் புது ஃபார்மெட்டை தமிழ் சினிமாவை ட்ரெண்டாக்கிய பெருமை அவருக்கே உண்டு. இதனால் அவரது இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று பெரிய ஹீரோக்கள் முதல் சின்ன ஹீரோக்கள்வரை ஆசைப்பட்டார்கள்.

ஸ்டைலிஷ் இயக்குநர்: அதேபோல் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர். அவர் படத்துடைய ஹீரோவோ, ஹீரோயினோ அல்லது சைடு ஆர்ட்டிஸ்ட்டோ யாராக இருந்தாலும் அவர்களை எவ்வளவு அழகாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு அழகாக காட்டிவிடுவார். அவர் வைக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் பார்க்கவே கவிதை மாதிரி இருக்கும் என்பது அவரது ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அது ஒருவகையில் உண்மையும்கூட.
முடங்கிய படம்: இயக்குநராக ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வர இயக்கத்தில் அவரது கவனம் சிதறியது. எடுக்கும் படங்கள் ஒன்று தோல்வியடைந்தன அல்லது எடுத்த படங்கள் ரிலீஸாகாமல் முடங்கியிருக்கின்றன. துருவ நட்சத்திரம் படத்தை முடித்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் வெளியாகவில்லை. தமிழில் கடைசியாக வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அது ஓரளவுக்கு வரவேற்பைத்தான் பெற்றது.
கௌதம் மேனனுக்கு பாராட்டு விழா: இருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதன் காரணமாக என்னோடு வா வீடு வரைக்கும் என்கிற பெயரில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். முக்கியமாக சூர்யாவும், ஜோதிகாவும் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டது மட்டுமின்றி கௌதம் மேனனோடு இணைந்து, 'அஞ்சல' பாடலுக்கு கௌதமுடன் சேர்ந்து சூப்பர் நடனமும் ஆடினார். அந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











