வீடியோ கால் மூலமாக திரிஷாவை இயக்கும் கெளதம் மேனன்.. மறுபடியும் அந்த ஜெஸி மேஜிக் கிடைக்குமா?

சென்னை: கலையை கட்டுப்படுத்த முடியாது என்பது கொரோனா விசயத்திலும் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது.

Recommended Video

Trisha opens up on her marriage | Actress Gibberish Challenge

கொரோனா பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகும் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், வீட்டில் இருந்தபடியே எப்படி குறும்படங்களையும், கொரோனா நிதி திரட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் உலகளவில் பல பிரபலங்களும் முனைந்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடிகை திரிஷா நடித்து வரும் தகவலை அவரே பதிவிட்டு இருக்கிறார்.

கொரோனா குறும்படம்

கொரோனா குறும்படம்

வீட்டில் இருந்தபடியே எடுக்கப்பட்ட கொரோனா குறும்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன் லால், மம்முட்டி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வெங்கட் பிரபுவின் சென்னை 28 டீமும், ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை அண்மையில் படமாக்கி ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாடல்கள்

கொரோனா பாடல்கள்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததும், நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டது. நடன இயக்குநர் சாண்டி, வடிவேலு, வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என பலரும் கொரோனா விழிப்புணர்வுக்கான பாடலை வீட்டில் இருந்தபடியே உருவாக்கி வெளியிட்டனர். கமல்ஹாசனின் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்து நம்பிக்கை ஊட்டும் "அறிவும் அன்பும்" பாடலை வெளியிட்டு வைரலாக்கினர்.

திரிஷா வீடியோ

திரிஷா வீடியோ

அந்த வரிசையில் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து வீடியோ கால் மூலமாக ஒரு குறும்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பது தெரிய வருகிறது. தங்களின் புராஜெக்ட் பற்றிய விசயங்கள் எதையும் விவரமாக சொல்லவில்லை என்றாலும், திரிஷாவின் ஆர்வம், நிச்சயம் நல்ல படைப்பை கொடுக்கும் என்றே தெரிகிறது.

கெளதம் இயக்குகிறார்

கெளதம் இயக்குகிறார்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை திரிஷா சிம்புவுடன் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு வீடியோ கால் மூலமாக ஐபோனில் எப்படி 4Kவில் படமெடுப்பது என்பதை இயக்குநர் கெளதம் மேனன் அந்த வீடியோவில் கைடு பண்ணுவது வரை திரிஷா வெளியிட்டு இருக்கிறார்.

ஜெஸி மேஜிக்

ஜெஸி மேஜிக்

நடிகை திரிஷா வெளியிட்டுள்ள அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், மறுபடியும் ஜெஸி மேஜிக் நிகழுமா என்றும், விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2வை வீட்டில் இருந்தபடியே எடுக்கிறீங்களா என்றும் சிம்பு எங்கே என்றும் கமெண்ட் செக்‌ஷனில் கேள்விகளாக கேட்டு வருகின்றனர். விரைவில் அந்த குறும்படத்தை நடிகை திரிஷா வெளியிடுவார் என தெரிகிறது. வெயிட் பண்ணி பார்க்கலாம்.

ரொம்ப மிஸ் பண்ணாரு

ரொம்ப மிஸ் பண்ணாரு

சமீபத்தில் ஷூட்டிங் இல்லாததால், தான் கேமரா முன்னால் நிற்கும் தருணத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என நடிகை திரிஷா பதிவிட்டு இருந்தார். டிக்டாக்கில் இணைந்து ஜாலியாக வீடியோ போட்டு வந்த திரிஷா, அடுத்த கட்டமாக ஒரு தரமான படைப்பை கெளதம் மேனனுடன் இணைந்து ரசிகர்களுக்காக கொடுப்பார் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X