Don't Miss!
- News
30 ஆண்டுகள் 266 நாட்கள்.. இதுதான் உலகின் மிகவும் வயதான நாய்! கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்
- Lifestyle
ஆண்களே! உங்க மனைவி உங்ககிட்ட இருந்து இந்த விஷயங்கள எதிர்பாக்குறாங்களாம்...அவை என்ன தெரியுமா?
- Sports
ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு.. இந்தியாவும் பங்கேற்பு
- Automobiles
இனி இந்த கார்களை வாங்கின மாதிரிதான்! இத செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா..புலம்பும் மக்கள்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லவ் டுடே படத்தில் பிரதீப் என்னை ஓட்டியிருந்தார்.. கெளதம் மேனன் பேசியதும் அர்ச்சனா ஆடிப்போயிட்டார்!
சென்னை: இயக்குநர்கள் ரவுண்ட் டேபிள் சந்திப்பில் லவ் டுடே படத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தன்னை ட்ரோல் செய்தது குறித்து வெளிப்படையாக இயக்குநர் கெளதம் மேனன் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் பங்கு பெற்ற ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியின் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.
தளபதி 67, ஏகே 62 படங்கள் பற்றிய அப்டேட்களுக்கு நடுவே லவ் டுடே படத்தில் கெளதம் மேனனை பிரதீப் ரங்கநாதன் ட்ரோல் செய்த பஞ்சாயத்தும் பேசப்பட்டது.
திருச்சிற்றம்பலம் முதல் லவ் டுடே வரை... 2022ல் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள்

லவ் டுடே படத்தில்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது ஏற்கனவே பல முன்னணி சினிமா பிரபலங்களை பற்றி அவதூறாக பேசியது, ட்ரோல் செய்தது என ஏகப்பட்ட வான்டட் லிஸ்ட் உள்ளன. இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் லவ் டுடே படத்தில் தன்னை கலாய்த்த காட்சிகள் பற்றி பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெளதம் மேனனை போலவே
டாய்லெட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு நாயகி இவானாவின் இன்ஸ்டாகிராம் உலகத்துக்குள் பிரதீப் ரங்கநாதன் செல்லும் காட்சியில் இயக்குநர் கெளதம் மேனனை போலவே யூடியூபர் குருபாய் நடித்திருப்பார். காதல் கவிதைகளை சொல்லி நாயகியை டார்ச்சர் செய்வது போன்ற ஒரு கதாபாத்திரத்தை அப்படியே அச்சு அசல் கெளதம் மேனனை போலவே சித்தரித்து இருப்பார் பிரதீப் ரங்கநாதன்.

என்னை ஓட்டியிருப்பாங்க
லவ் டுடே படத்தின் வெற்றியை பாராட்டிய கெளதம் மேனன், உண்மையில் அந்த படத்தில் என்னை ஒரு சீன்ல ஓட்டியிருப்பாங்க.. அந்த காட்சியில் என்ன நடிக்க கூப்பிட்டு இருந்தால் நானே வந்து நடித்துக் கொடுத்திருப்பேன் என செம ஸ்போர்ட்டிவாக பேசுவது போல பேசி சரியான சமயத்தில் பதிலடி கொடுத்து விட்டார்.

ஆடிப்போன அர்ச்சனா
அந்த ரவுண்ட் டேபிளில் இயக்குநர்கள் மத்தியில் இளம் தயாரிப்பாளராக அமர்ந்திருந்த லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கெளதம் மேனன் பேசியதுமே சார் என மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசி விட்டார். கெளதம் மேனன் பெருந்தன்மையாக பேசிய வீடியோவை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு பலரும் டேக் செய்து வருகின்றனர்.

தளபதி 67 படத்தில்
அதே பேட்டியில் தான் அடுத்து தளபதி 67 படத்தில் நடிக்கப் போவதையும் அறிவித்து விஜய் ரசிகர்களை வெறியேற்றி உள்ளார் கெளதம் மேனன். ஏகப்பட்ட இளம் இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ள கெளதம் மேனனையே பிரதீப் ரங்கநாதன் ட்ரோல் செய்துள்ளாரே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.