துருவ நட்சத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி.. நினைத்தாலே சூப்பரா இருக்கு.. ஆனா ஒரு ட்விஸ்ட்

சென்னை: Dhruva Natchathiram (துருவ நட்சத்திரம்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கௌதம் மேனன் கதை சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர்.

Gautham Menon has said that he first told the story of Dhruva Natchathiram to Rajinikanth

நடிப்பில் கவனம்: இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பத்து தல, கருமேகங்கள் கலைகின்றன, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

துருவ நட்சத்திரம்: இதற்கிடையே அவர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் . இதில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

எதிர்பார்ப்பில் துருவ நட்சத்திரம்: இந்தப் படமானது கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரத்தின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க படத்தை சுற்றியிருந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அதனையடுத்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை முழுவதும் பார்த்த விக்ரமுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

படம் ரிலீஸ்: நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியிருப்பதன் காரணமாக கண்டிப்பாக படம் ரசிகர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கௌதம் மேனன் ஈடுபட்டிருக்கிறார்.

ரஜினியிடம் சொன்ன கதை: அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன். ஆனால் அவரோ ஸ்பை த்ரில்லர் ஜானர் கதைகளை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்று கூறி விலகிவிட்டார். அதன் பிறகு ரஜினிகாந்த்திடமும் இந்தப் படத்தின் கதையை சொன்னேன்.

அவரிடம் கதை சொல்லும்போது அவரது வயது, ஸ்டைலுக்கு தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கதை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் அவரால் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு விக்ரமிடம் சொன்னேன். அவர் ஒத்துக்கொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X