48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் கவுதம் வாசுதேவ் மேனன்.

மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தரமான படைப்புகளை வழங்கியுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் கவுதம் மேனனிற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து கூறி சிறப்பித்துள்ளனர்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

தமிழ் சினிமாவில் ஸ்டைலீஷ் ஃபிலிம் மேக்கர் என அழைக்கப்படும் கவுதம் மேனன் காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு என இன்றளவும் பேசும்படியாக படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீப காலமாக படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.

தரமான சம்பவம்!

தரமான சம்பவம்!

ட்ரான்ஸ் திரைப்படத்தில் வில்லனாகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் போலீஸாகவும் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார் கவுதம் மேனன். பாவ கதைகள் (வான் மகள்) படத்தில் தந்தையாக தனித்துவமான கதாபாத்திரமாக இருந்தார் கவுதம் மேனன். சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரியிலும் நடித்துள்ளார் கவுதம் மேனன்.

வெளிவரவுள்ள படங்கள்

வெளிவரவுள்ள படங்கள்

கவுதம் மேனன் ஒருபுறம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வர, சில காரணங்களால் அவருடைய படங்கள் வெளிவராமல் சிக்கலில் உள்ளது. கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ள துருவ நட்சத்திரம், தயாரித்துள்ள நரகாசூரன் ஆகிய படங்கள் வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தயாரிப்பு நிறுவனத்தால் சிக்கலில் உள்ள படங்களை கவுதம் மேனன் கூடிய விரைவில் மீட்டெடுப்பார் என தெரிகிறது. அது தவிர்த்து கவுதம் மேனன் ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கவுள்ளார், ஜோஷ்வா இமைப்போல் காக்க படம் இந்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, சிம்பு உடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளார் கவுதம் மேனன். இப்படியாக கவுதம் மேனனிற்கு படங்கள் வரிசை கட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X