விக்ரமின் துருவ நட்சத்திரம் தாமதமாக இதான் காரணமா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் தாமதமாவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

கவுதம் மேனன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

தாமதமாக காரணம்

தாமதமாக காரணம்

படத்தின் புரமோஷனுக்காக வெளியான விக்ரமின் ஸ்டைலிஷ் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் பல்வேறு காரணங்களால் தாமதமாவதாக தெரிகிறது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிகிறது.

விக்ரம் வேண்டுகோள்

விக்ரம் வேண்டுகோள்

நிறைவடைய இன்னும் பல நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ஏராளமான படங்களில் நடித்து வரும் விக்ரம், துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகளை தொடங்குமாறு இயக்குநர் கவுதம் மேனனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கூறிவிட்டார்.

காதில் வாங்காத கவுதம்

காதில் வாங்காத கவுதம்

ஆனால் கவுதம் மேனன் இதுவரை அதற்கு ரியாக்ட் செய்யவில்லை என தெரிகிறது. இதனால்தான் விக்ரம் இன்னமும் ஷூட்டிங்கை தொடங்கவில்லை என்றும் இதுவும் துருவ நட்சத்திரம் படம் தாமதமாக காரணம் என்று கூறப்படுகிறது.

மகனுடன் சேர்ந்து

மகனுடன் சேர்ந்து

இதனிடையே விக்ரம் தனது 60வது படமான சியான் 60 படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் விக்ரம் முதல் முறையாக தனது மகன் துருவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X