நான் அப்படி செய்ததற்கு அதுவே காரணம்.. வாரணம் ஆயிரத்தில்தான் முடிந்தது.. கௌதம் மேனன் ஓபன் டாக்

சென்னை: கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் ஹீரோக்கள் நினைத்த காலம் உண்டு. தற்போது அவர் படங்கள் இயக்குவதை குறைத்திருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் டாமினிக் திரைப்படம் வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மின்னலே படத்தில் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்றார். காதல் படமாக அதை அவர் உருவாக்கியிருந்தாலும் ஹீரோவுக்கு தேவையான மாஸ் எலிமென்ட்ஸை வைத்திருந்தார். அது மாதவனுக்கு நன்றாகவே செட் ஆனது. அந்தப் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து யார் இந்த இயக்குநர் என்ற கேள்வியை பலரும் கேட்டார்கள். முதல் படத்துக்கு பிறகு இரண்டாவது படமாக காக்க காக்க திரைப்படத்தை இயக்கினார்.

gautham menon dominic

சூர்யாவுக்கு முக்கியம்: அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சூர்யாவுக்கு எப்படி நந்தா திரைப்படம் அவரது கரியரில் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காக்க காக்க திரைப்படமும் முக்கியமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது கரியரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றதில் காக்க காக்கவுக்கு அதீத பங்கு இருக்கிறது. முதல் இரண்டு படங்களுமே கௌதமுக்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முன்னணி இயக்குநராக மாறினார். அப்படி அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

குறைத்த கௌதம்: விண்ணைத்தாண்டி வருவாயா படமும் க்ளாசிக்கல் படமாக அமைந்தது. ஆனால் திடீரென அவருக்கு கடன் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் அதிகமாக இயக்க முடியவில்லை. எனவே இயக்கத்தை குறைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர். தொடர்ந்து பல படங்களில் வரிசையாக நடித்தார். இருந்தாலும் அவர் இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். அப்படி அவர் வெந்து தணிந்தது காடு, ஜோஷ்வா இமைபோல் காக்க படங்களை இயக்கினார்.

டாமினிக்: இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. பிறகு கொஞ்சம் கேப் விட்ட அவர்; மம்மூட்டியை வைத்து டாமினிக் படத்தை கடைசியாக இயக்கினார். அந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸானது. கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "எனது முழு பெயர் கௌதம் வாசுதேவ் மேனன். எனது தாத்தா பெயர்தான் வாசுதேவ்.

காரணம் இதுதான்: முதல் படத்தின்போது கௌதம் வாசுதேவ் மேனன் என போட வேண்டாம். அது ரொம்ப நீளமாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் சொன்னார். சரி என்று கௌதம் என போட்டுக்கொண்டேன். வாரணம் ஆயிரம் படத்தில்தான் எனக்கு எனது முழு பெயரை போடும் சுதந்திரம் கிடைத்தது. அதனால்தான் அந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் என்று போட்டுக்கொண்டேன். இதுதான் காரணமே ஒழிய வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X