பார்த்திபன் சார்... உங்களப் போடணும் சார் - கவுதம் மேனன்

By Manjula

சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நானும் ரவுடிதான் படத்தை, இயக்குநர் கவுதம் மேனன் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை வரவேற்கிறோம் என்று கூறிய அவர் தொடர்ந்து படத்தில் நடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியிருக்கிறார்.

சில நேரங்களில் தாமதமாக வருவதே நல்லது விக்னேஷ், இப்பொழுது உங்கள் முதல் படமான போடா போடியை அனைவரும் கவனிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் ஆகியோரின் நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரித்து இருந்தார்.நகைச்சுவை கலந்த காதலுடன் வெளியான நானும் ரவுடிதான் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மேலும் படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்களால் நிறைய திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.

கவுதம் வாசுதேவமேனன்

இயக்குநர் கவுதம் மேனன் சமீபத்தில் இப்படத்தைப் பார்த்து படக்குழுவினரை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார். "நானும் ரவுடிதான் ஒரு இளம்வயது இயக்குனரின் படம் என்பதைப் பறை சாற்றுகிறது. அசலான ஒரு வேடிக்கை மற்றும் ஒரு கலகலப்பான படத்தை விக்னேஷ் சிவன் வழங்கியிருக்கிறார். விக்கியை வரவேற்கிறேன்!

போடா போடி

சில நேரங்களில் தாமதமாக வருவதே நல்லது. இப்பொழுது உங்கள் முதல் படமான போடா போடி எல்லோராலும் கவனிக்கப்படும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவனின் முதல் படத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நயன்தாரா - விஜய் சேதுபதி

நயன்தாரா - என்ன மாதிரியான நடிகை அவர், அவரின் அதிரடியான நடிப்பைக் காட்டியிருக்கிறார். விஜய் சேதுபதி - பிரியமான விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக மாறுவதற்கான அடியை எடுத்து வைத்திருக்கிறார்.

rn

பார்த்திபன் உங்கள போடணும்

"பார்த்திபன் சார் உங்கள போடணும் சார், இந்த மாதிரி வித்தியாசமான வில்லன் வேடத்துல எல்லோரும் உங்கள போடணும் சார். கலக்கிட்டீங்க சார்" என்று பார்த்திபனின் நடிப்பையும் கவனித்துப் பாராட்டியிருக்கிறார் கவுதம் மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X