twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் விஜய் தேவரகொண்டாவை இயக்க காத்திருக்கும் பிரபல தமிழ் இயக்குனர்!

    |

    சென்னை : நடிகர் விஜய் தேவரகொண்டா இப்பொழுது இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லீகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இதுவரை ஸ்வீட்டான லவ்வர் பாயாக வலம் வந்து கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் முரட்டுத்தனமான குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார்.

    உன்னை எனக்கு புடிக்கும் அதான் உனக்கு லைக்கொடுத்தேன்..பேச்சு வாக்கில் அக்ஷராவுக்கு வலை வீசும் ராஜு உன்னை எனக்கு புடிக்கும் அதான் உனக்கு லைக்கொடுத்தேன்..பேச்சு வாக்கில் அக்ஷராவுக்கு வலை வீசும் ராஜு

    இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்க காத்துக் கொண்டிருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    எக்கச்சக்கமான ரசிகர்கள்

    எக்கச்சக்கமான ரசிகர்கள்

    அர்ஜுன் ரெட்டி வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் அனைவராலும் ரசிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகராக மாறி உள்ளார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்து வர அர்ஜுன் ரெட்டி தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பட்டையைக் கிளப்பியது. தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க இவரது திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.

    அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே

    அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே

    அறிமுகமான சில வருடங்களிலேயே தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் தேவரகொண்டாவிற்கு கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் சரியாக கை கொடுக்கவில்லை மாறாக தோல்வியை தழுவியது. அர்ஜுன் ரெட்டி சாயலிலேயே இந்தப்படமும் உருவாக்கப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

    முரட்டுத்தனமான குத்துச் சண்டை

    முரட்டுத்தனமான குத்துச் சண்டை

    இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லீகர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை லவ்வர் பாயாக படங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து வந்த விஜய் தேவரகொண்டா லீகர் திரைப்படத்தில் முரட்டுத்தனமான குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். கரண் ஜோஹர் மற்றும் நடிகை சார்மி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிவருகிறது.

    அட்டகாசமான காதல் கதை

    அட்டகாசமான காதல் கதை

    தமிழில் நோட்டா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தேவரகொண்டா அதன்பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக உள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் தேவரகொண்டாவுக்காக அட்டகாசமான காதல் கதையை தயார் செய்து இருப்பதாகவும்.

    கௌதம் வாசுதேவ் மேனன்

    கௌதம் வாசுதேவ் மேனன்

    விரைவில் கால்சீட் கிடைத்த உடன் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றிய ஆவலாக உள்ளதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓபனாக தெரிவித்திருந்தார். விஜய் தேவர கொண்டா லீகர் படத்தை தொடர்ந்து டக் ஜெகதீஷ் பட இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gautham Menon Likely to Direct a Movie with Vijay Devarakonda
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X