Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மீண்டும் சிம்புவை இயக்கும் கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா 2 பத்தி என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர் சிம்புவின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா மற்றும் சிம்புவின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. அந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தெலுங்கிலும்
மாஸ்
காட்டிய
சிம்பு…
ஆஹா...
பாட்டு
மெர்சலாக
இருக்கே!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு பல சிறப்பான படங்களில், அதிரடி படங்களில் நடித்துள்ளார். காதல் படங்களிலும் அவர் நடித்திருந்தாலும் அவரை காதல் படங்களில் மிகவும் சிறப்பாக பயன்படுத்திய பெருமை கௌதம் மேனனுக்கே உண்டு. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த படங்களில் மிகவும் முக்கியமானது விண்ணைத் தாண்டி வருவாயா படம்.

சிம்பு -த்ரிஷா காம்பினேஷன்
இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. இவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் வசித்துவரும் நிலையில் ஊரிலிருந்து வரும் த்ரிஷாவுக்கும் சிம்புவுக்கும் ஏற்படும் காதல், அதையொட்டிய கதைக்களம் என படம் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட செய்தது.

வசூலை வாரிக்குவித்த படம்
காதல் படங்களின் லிஸ்ட்டில் இந்தப் படத்திற்கு மிகவும் சிறப்பான இடம் எப்போதுமே உண்டு. கடந்த 2009ல் விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியானது. ஆனாலும் இப்போது பார்த்தாலும் மிகவும் ப்ரெஷ்ஷான அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு கொடுக்கும். படம் சூப்பர் ஹிட்டடித்தது. பாக்ஸ் ஆபீசிலும் சிறப்பான வசூலை குவித்தது.

இரண்டாவது பாகத்திற்கு எதிர்பார்ப்பு
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் கௌதம் மேனனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

கௌதம் மேனன் அப்டேட்
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சிம்புவுடன் இணைந்து கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படம்
விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தி பல கெட்டப்புகளில் சிம்பு காணப்படுகிறார். படத்தின் கேரக்டருக்காக அவருடைய மெனக்கெடலும் தெரிகிறது. படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
-
உன் பேச்ச கேட்டா என் உசுரு போய்டும்...சத்யராஜ் சொன்னதுக்கு விஜயகாந்த் விழுந்து விழுந்து சிரிச்சாரு
-
ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. நெகிழ்ச்சிப்பதிவு.. எதுக்குன்னு தெரியுமா?
-
அதள பாதாளத்தில் பாலிவுட்...அசுர வளர்ச்சியில் தென்னிந்திய படங்கள்...என்ன காரணம்...ஒரு சுவாரஸ்ய அலசல்