பாட்டுல இருந்துதான் டைட்டிலை முடிவு செஞ்சேன்... வெளிப்படுத்திய கௌதம் மேனன்
சென்னை : 9 இயக்குநர்கள் கைவண்ணத்தில் 9 படங்களின் தொகுப்பாக நவரசா ஆந்தாலஜி உருவாகியுள்ளது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நவரசா வரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தான் எவ்வாறு முடிவு செய்தேன் என்று கௌதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 6ல் ரிலீஸ்
டைரக்டர் மணிரத்னத்தின் உருவாக்கத்தில் நவரசா ஆந்தாலஜி உருவாகியுள்ளது. 9 இயக்குநர்கள் கைவண்ணத்தில் 9 படங்களின் தொகுப்பாக இந்த நவரசா உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நவரசா ஓடிடியில் வெளியாக உள்ளது. திரையுலக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நவரசா உருவாக்கப்பட்டுள்ளது.

9 டைரக்டர்கள்
காதல், மகிழ்ச்சி, ஆச்சர்யம், அமைதி, பயம் உள்ளிட்ட ஒன்பது ரசங்களின் கலவையாக நவரசா உருவாக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷன், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இந்த படங்களை டைரக்ட் செய்துள்ளனர். முதல் முறையாக அரவிந்த் சாமி இதன்மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

டீசர், பாடல் வெளியீடு
நவரசாவில் காதல் என்ற ரசத்தை கையில் எடுத்துள்ளார் கௌதம் மேனன். இதில் சூர்யா மற்றும் பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிடார் கம்பி மேலே நின்று என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

மெனக்கெடவில்லை என கருத்து
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தூரிகா என்ற பாடலில் இருந்து தான் இந்த டைட்டிலை எடுத்ததாகவும் அதற்காக மெனக்கெடவில்லை என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











