‘தல’ அஜித்தின் அடுத்த நாயகி யார்?
வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்தில் அஜீத் ஜோடியாக டூயட் பாடப்போகும் நாயகி யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கௌதம்மேனன் இயக்கும் இந்த படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளது.
முற்றிலும் வெளிநாட்டில் படமாகவுள்ள இந்த படத்தின் திரைக்கதையை முழுவதுமாக முடித்துவிட்டார் கௌதம் மேனன்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை
அஜித் தற்போது ஓய்விற்காக வெளிநாட்டிற்குப் போயுள்ளார். அவர் வந்தவுடன் அவரிடம் திரைக்கதையை காட்டிவிட்டு படப்பிடிப்பை தொடங்கவேண்டியது தான் என கௌதம் மேனன் கூறியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பாலிவுட் மாடல் பல்லவி சுபாஷ்
இந்நிலையில் படத்தின் நாயகி பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன. அஜீத் ஜோடியாக பாலிவுட் நடிகை பல்லவி சுபாஷ் நடிக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது.

சிம்புவின் ஜோடி
தற்பொது கௌதம் மேனன், சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பல்லவி சுபாஷ். அவரே அஜித் படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அனுஷ்கா , திரிஷா
ஆனால் இப்போது அனுஷ்கா அல்லது திரிஷா அஜித்துடன் ஜோடி சேர்வார்கள் என்று பேசப்பட்டு வருகிறது. விரைவில் யார் ஹீரோயின் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சீக்கிரம் முடிவெடுங்க
ஏற்கனவே கதாநாயகி யார் என்ற சிக்கல் காரணமாகத்தான் சூர்யா உடனான கௌதம் மேனன் படம் ட்ராப் ஆனது. எனவே அஜீத் படத்திலாவது விரைவில் கதாநாயகி யார் என்பதை முடிவெடுங்கள் கௌதம் மேனன்.


Click it and Unblock the Notifications











