தனுஷுக்கும் எனக்கும் செட் ஆகவில்லை.. ரிசல்ட் முன்னாடியே தெரியும்.. கௌதம் மேனன் ஓபன் டாக்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஸ்டைலிஷ் இயக்குநர்: கௌதம் மேனன் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். தனது ஒவ்வொரு படத்தையும் ப்ளெசண்ட்டாக, ஹீரோவை வேறு மாதிரியான ஒரு அழகாக காண்பிக்கக்கூடியவர் அவர். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் படங்கள். அந்தப் படங்களில் அவரது லுக் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட். அதேபோல் கமல் ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு ஆகியோரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் கௌதம்.

Gautham Menon Open Talks about Dhanush and Ennai Nokki Paayum Thotta Movie

காதல் இயக்குநர்: ஸ்டைலிஷ்ஷாக மட்டுமின்றி தன்னுடைய திரைக்கதை, வசனம், மேக்கிங் மூலம் அசரடிப்பவர் கௌதம் மேனன். அதேபோல் காதல் ஜானர் என்றால் மனிதர் உற்சாகமாகிவிடுவார். அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் ஜானர் படங்கள் உச்சத்தில் இருப்பவை. முக்கியமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆக்‌ஷன் ஜானரில் அவர் படம் எடுத்தால்கூட; அதில் அவரும் லவ் போர்ஷன் தனித்து தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒதுங்கிய கௌதம்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதனால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் கௌதம் மேனன் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கினார் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் சிம்புவை வைத்து அவர் இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு மெகா ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னை நோக்கி பாயும் தோட்டா: இதற்கிடையே அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் பல சிக்கல்களை கடந்து வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. படம் முழுக்க வந்த வாய்ஸ் ஓவர், காலங்கடந்து ரிலீஸ் என சில சிக்கல்கள் இருந்ததால்தான் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப் ஆனதாக ரசிகர்கள் கருதினர்.

கௌதம் மேனன் பேட்டி: இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு தாமதமானதில் தனுஷ் அப்செட்டாகிவிட்டார். அதுமட்டுமின்றி எனக்கும் அவருக்கும் இடையேயான வைப் செட் ஆகவில்லை. அதேபோல் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே இதில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதை ஃபீல் செய்தேன். இருப்பினும் ஏதாவது ஒரு மேஜிக் நடந்து இப்படம் காப்பாற்றப்படும் என்ற நோக்கத்தில்தான் படத்தை முடித்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X