அடுத்து விஜய் படம் தான்.. பக்காவான கதை ரெடியாகுது.. இந்த முறை கெளதம் மேனனுக்கு வொர்க்கவுட் ஆகுமா?

சென்னை: அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களை இயக்கி உள்ள கெளதம் மேனன் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இணைவதில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே மிஸ் ஆன அந்த வாய்ப்பு இம்முறை மிஸ் ஆகாது என்றும் கருதுகிறார்.

கெளதம் மேனன் படத்தில் செம ஸ்டைலாக விஜய் வித்தியாசமாக நடிப்பதை பார்க்க ரசிகர்களும் வெயிட்டிங் தான்.

காக்க காக்க படமே

காக்க காக்க படமே

சூர்யாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்த காக்க காக்க திரைப்படமே நடிகர் விஜய்க்காக கெளதம் மேனன் உருவாக்கிய கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த சமயத்தில் கால் ஷீட் வொர்க்கவுட் ஆகாததால், விஜய்யை இயக்கும் வாய்ப்பு கெளதம் மேனனுக்கு கிடைக்கவில்லை.

மிஸ்ஸான யோகன்

மிஸ்ஸான யோகன்

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தளபதி விஜய்க்காக ஒரு கதையை ரெடி பண்ணி யோகன் அத்தியாயம் ஒன்று என்ற டைட்டிலில் ஏகப்பட்ட பாகங்களையும் உருவாக்க கெளதம் மேனன் திட்டமிட்டு இருந்தார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியான நிலையில், சில பல பிரச்சனைகள் காரணமாக அந்த படம் அப்படியே டிராப் செய்யப்பட்டது.

அடுத்த படம்

அடுத்த படம்

தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் பிசியாகி உள்ள நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 66 படத்தை இயக்குநர் கெளதம் மேனன் உடன் பண்ண நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் கெளதமும் இந்த முறை விஜய்யை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக பக்காவான கதையை ரெடி செய்து வருகிறாராம்.

இந்த ஆண்டுக்குள்

இந்த ஆண்டுக்குள்

இந்த ஆண்டு இறுதிக்குள் தளபதி விஜய்க்கு முழு கதையும் சொல்லி ஓகே செய்யும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இதுவரை பார்த்திராத கோணத்தில் நிச்சயம் தளபதி விஜய்யை செம ஸ்டைலாக காட்டவும் திட்டமிட்டுள்ளாராம்.

தேனாண்டாள் தயாரிப்பில்

தேனாண்டாள் தயாரிப்பில்

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில், தளபதி 66 படத்தை மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கப் போவது 99 சதவீதம் உறுதியாகி விட்டது. சிம்புவின் படத்தை முடித்த கையோடு விஜய் படத்திற்கான வேலைகளை கெளதம் மேனன் பார்க்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

கெளதம் மேனன் உள்ளிட்ட 4 இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகி உள்ள குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படம் நாளை தியேட்டர்களில் ரிலீசாகிறது. அதில் இடம்பெற்றுள்ள எதிர்பாரா முத்தம் கதையை இயக்கி நடித்துள்ளார் கெளதம் மேனன். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இளம் வயது கெளதம் மேனனாக வினோத் கிஷன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X