சூர்யா தான் என் முதல் தேர்வு… இன்னொருவரை என்னால் கற்பனை செய்ய முடியாது.. மனம் திறந்த கெளதம் மேனன்!
இயக்குனர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான நவரசா 9 குறும்படங்களை கொண்டுள்ளது. அதில், கௌதம் மேனன் இயக்கும் பகுதிக்கு கிட்டார் கம்பி மேல நின்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூரியா கமலாகவும், பிரயாகா ரோஸ் மார்ட்டின் நேத்ராவாகவும் நடித்துள்ளனர்.
கிடார் கம்பி மேல நின்னு படப்பிடிப்பின் போது நிகழ்ந்த அனுபவங்களையும், சூர்யா மற்றும் பிரக்யா ரோஷ் மார்ட்டினுடனான அனுபவங்களையும் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்டார்.

இந்த கதாபாத்திரத்திற்கு சூரியா தான் எனது முதல் தேர்வாக இருந்தார். இந்த கதாபாத்திரத்தில் சூர்யாவை தவிர இன்னொருவரை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று கௌதம் மேனன் கூறினார். அவருடன் வேலை செய்ய நான் நீண்ட காலமாக காத்திருந்தேன். இந்த படம் ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது என்றார் கௌதம் மேனன்.
கமலின் வாழ்க்கையில் நேத்ரா புதிய காற்றின் சுவாசமாக வருகிறார். பிரயாகா ரோஸ் மார்ட்டின் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்துள்ளார். அவள் பேசும் விதம், அவள் தோற்றத்தின் விதம், அவள் தலைமுடியுடன் விளையாடும் விதம், இசையைப் பற்றி அவள் பேசும் விதம் மற்றும் கதாபாத்திரத்துடன் இணைக்கும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. இவை திரையில் எப்படி வந்துள்ளது என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் கௌதம் மேனன் மனம் திறந்து கூறினார்.
அன்பு, சிரிப்பு, கோபம், துக்கம், தைரியம், பயம், வெறுப்பு, ஆச்சரியம் மற்றும் அமைதி ஆகிய ஒன்பது வெவ்வேறு உணர்ச்சிகளை வரவிருக்கும் இந்த ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 6ந் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடியில் வெளியாக உள்ளது. 190 நாடுகளில் நவசரா வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications