வேட்டையாடு விளையாடு 2 ரெடி ஆகிடுச்சு.. கமலும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டார்.. கௌதம் மேனன் ஓபன் டாக்

சென்னை: கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயாவரை தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இவற்றில் வெந்து தணிந்து காடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தச் சூழலில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியிருக்கிறார் அவர்.

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். மாதவன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இன்றுவரை அவரது படங்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுவருவதை வைத்தே உணர்ந்துகொள்ளலாம் அவர் எந்த அளவுக்கு ஃபார்மில் இருந்தார் என்று.

Gautham Menon Reveals About Vettaiyaadu Vilayaadu Movie Part Two

ஸ்டைலிஷ் இயக்குநர்: அதேபோல் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர்களில் கௌதம் மேனன் முக்கியமானவர். அவரது இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் அவ்வளவு அழகாக காட்சியளிப்பார்கள். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அத்தனையையுமே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறு ஒரு ஆளாக கேமரா முன் நிறுத்துவார் கௌதம் மேனன். இன்றுவரை சிம்பு, சூர்யா உள்ளிட்டோரின் ஆல்டைம் ஃபேவரைட் லுக் எது என்று ரசிகர்களிடம் கேட்டால் அதில் கௌதம் மேனன் இயக்கிய படத்தின் லுக்கும் இருக்கும்.

பிரச்னைகள்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக இயக்கத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். பிறகு பிரச்னைகளை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிப்பிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட்டானது. படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கமல் ஹாசனின் தீவிர ரசிகர்: தற்போதைய 2K கிட்ஸ்களை பொறுத்தவரை இயக்குநர்களில் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்றால் லோகேஷ் கனகராஜ் என்று கை காட்டுவார்கள். ஆனால் லோகேஷுக்கெல்லாம் முன்னோடியாக கௌதம் மேனனே கமலின் தீவிரமான ரசிகர். அவர் கையில் போட்டிருக்கும் காப்புக்கூட சத்யா படத்தில் கமல் ஹாசன் போட்டதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட கௌதம் மேனன் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற படத்தின் மூலம் தரமான சம்பவம் செய்தார்.

மெகா ஹிட்: கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமல் ஹாசனை வேறு ஃப்ளேவரில் காண்பித்திருந்தார். கமலின் ஓபனிங் சீன்கூட இன்றுவரை மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குரியது என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு கமலுடன் கௌதம் மேனன் இணையவில்லை. அதேசமயம் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கௌதம் மேனன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வேட்டையாடு விளையாடு 2 குறித்து பேசியிருக்கிறார் அந்தப் பேட்டியில் பேசிய அவர், "வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாக கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன். அந்தக் கதையை கமலிடம் சரியான நேரத்தில் எடுத்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கிறேன். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்தடுத்த படங்கள் இயக்குவதில் நானும் பிஸியாக இருந்தேன், நடிப்பதில் கமலும் பிஸியாக இருந்தார்.

கமலின் க்ரீன் சிக்னல்: அந்தச் சமயத்தில் இரண்டு, மூன்று முறை கமலை சந்தித்தபோது வேட்டையாடு விளையாடு 2 படத்தின் ஐடியாவை சொன்னேன். நல்லா இருக்கு புரசீட் என்று கூறினார். இப்போது நான் எங்கு சென்றாலும் துருவ நட்சத்திரம் பட விவகாரத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறார்கள். அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் அடுத்து என்ன என்று யோசிக்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2 ஸ்க்ரிப்ட் உள்ளது. நிச்சயம் அந்தப் படத்தை எடுப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X