விஜய்க்காக கதையும் ரெடி, பெயரும் ரெடி...வெளிப்படையாக சொன்ன கெளதம் மேனன்
சென்னை : கோலிவுட்டின் முன்னணி டைரக்டர்களில் கெளதம் மேனனும் ஒருவர். இவர் ஆக்ஷன், ரொமான்ஸ் என பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார். கமல், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து 20 ஆண்டுகளாக படம் இயக்கி வருகிறார்.

ஆனால் விஜய்யை இயக்க வேண்டும் என்ற இவரது கனவு நீண்ட காலமாக தள்ளி போய் கொண்டே இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் விஜய்யை வைத்து யோகன் என்ற பெயரில் படம் இயக்க திட்டமிட்ட கெளதம் மேனன், ஆரம்ப கட்ட வேலைகளை துவக்கினார். ஆனால் அதற்கு பிறகு அது என்ன ஆனதென்றெ தெரியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், யோகன் படத்தின் கதை பற்றி கெளதம் மேனன் கூறினார். அதில், யோகன் ஸ்பை த்ரில்லர் கதை. இது முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதை. இதில் விமான விபத்து ஒன்றில் தனது காதலியை இழந்த இளைஞர் ஒருவர், அந்த விபத்தை ஏற்படுத்திய 3 பேரை தேடும் பணியில் இறங்குகிறார்.
பிறகு அவர் எப்படி சிஐஏ.,வில் இணைந்து, டாப் ஏஜென்ட்டாக மாறுகிறார் என்பது தான் கதை. முதலில் விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. பிறகு தன்னால் இதில் நடிக்க முடியாது என்றார். சில நாட்களுக்கு பிறகு தானே நடிப்பதாக ஒப்புக் கொண்டார் என்றார்.
Recommended Video
தற்போது யோகன் படத்தின் கதை பற்றி கெளதம் மேனன் வெளிப்படையாக கூறி உள்ளதால் விரைவில் கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும், யோகன் - அத்தியாயம் ஒன்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











