அடுத்து ஃபைட்டுதான்... கவுதம் படத்தில் ஆக்ஷனுக்கு ரெடியாகிறார் அனுஷ்கா
சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம், எனை நோக்கி பாயும் தோட்டா பல்வேறு பிரச்னைகளை சந்தித்த இந்தப் படம் ஒரு வழியாக, கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.
இதை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம், வெளியாக இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு மேலும் 3 படங்களை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன்.

ஜோஸ்வா
இப்போது, வருண் நடிக்கும் ஜோஸ்வா என்ற படத்தை இயக்கி வருகிறார் கவுதம். இதில் வருண் ஜோடியாக புதுமுக நடிகை ராஹய் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அனுஷ்கா ஹீரோயின்
அமெரிக்கா மற்றும் லண்டனிலும் இதன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கு இந்தி கதாசிரியரும் இயக்குனருமான கோவிந்த் நிஹலானி கதை எழுதியுள்ளார்.

த்ரில்லர் கதை
இன்னும் பெயரிடப்படாத இதன் கதை, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்டது. மிலிட்டரி ஆக்ஷன் த்ரில்லர் கதையான இதில், பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இந்தக் காட்சிகளில் அனுஷ்கா நடிக்க இருக்கிறார்.

அடுத்த மாதம்
தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இந்த படம், ஜோஸ்வா படம் முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அனுஷ்கா, இப்போது மாதவன் ஜோடியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











