இரண்டாவது திருமணம் முடிந்தது...போட்டோ வெளியிட்ட கவுதம் மேனன் கதாநாயகி

மும்பை : 2001 ம் ஆண்டு டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடித்து வெளிவந்த படம் மின்னலே. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு உடனடியாக இந்தி படம் இயக்கும் வாய்ப்பு கவுதம் மேனனுக்கு கிடைத்தது.

Recommended Video

Kutty Story Audience Opinion | Vijay Sethupathi, Gautham Menon

Gautham Menons heroine gets married for the second time

மாதவனை ஹீரோவாக வைத்து ரெஹ்னா ஹெய் தேரி தில் மெயின் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தியா மிர்சா. 2000 ம் ஆண்டு சர்வதேச மிஸ் ஆசியா பசிபிக் பட்டம் வென்றவர். இதற்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகின.

Gautham Menons heroine gets married for the second time

2014 ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான ஷாகில் சங்காவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் 2019 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது 39 வயதாகும் தியா, மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.

Gautham Menons heroine gets married for the second time

மும்பையை சேர்ந்த தொழிலதிபரான வைபவ் ரேஹி என்பவரை காதலித்து வந்த தியா, பிப்ரவரி 15 அன்று அவரை திருமணம் செய்து கொண்டனர். இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தியா, அன்பு எங்கும் சுற்றிக் கொண்டிருக்கும். அது நம் கதவை தட்டும் போது அந்த அதிசயத்தை கண்டுபிடித்து, தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மகிழ்ச்சியான, நிறைவான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னையும் என் குடும்பத்தையும் சுற்றிய புதிர்கள் மறைந்து, அன்பும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருக்கட்டும் என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X