வேகம் காட்டும் வேல்ஸ்.. டிரெண்டாகும் ஜோஷ்வா செகண்ட் லுக்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பப்பி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான வருண் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ஜோஷ்வா இமைபோல் காக்க படம் உருவாகி வருகிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை தீர்ந்தது

பிரச்சனை தீர்ந்தது

கெளதம் மேனனை சுற்றி இருந்த கடன் பிரச்சனைகளை தீர்க்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நீட்டிய உதவிக் கரத்தால், கெளதம் மேனன் சிக்கலில் இருந்து மீண்டுள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா அடுத்த வாரம் வெளியாகிறது.

எனை நோக்கிப் பாயும் தோட்டா

எனை நோக்கிப் பாயும் தோட்டா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார் நடிப்பில் உருவான எனை நோக்கிப் பாயும் தோட்டா நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. கெளதம் மேனனை சுற்றி இருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீரத் தொடங்கியுள்ள நிலையில் வரும் நவம்பர் 29ம் தேதி எனை நோக்கிப் பாயும் தோட்டா நிச்சயம் திரைக்கு வரும் என இயக்குநர் கெளதம் மேனன் உறுதியளித்துள்ளார்.

பப்பி

பப்பி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான பப்பி படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தில் அறிமுக நாயகன் வருண், 'கோமாளி' சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்து வருகிறார்.

காதலர் தின பரிசு

எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்த கெளதம் மேனன், அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு ஜோஷ்வா இமை போல் காக்க படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் உடனடியாக அறிவித்தார். தற்போது அந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்து

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் கோமாளி படம் 100 நாட்களை கடந்துள்ளது. அடுத்த வாரம் எனை நோக்கிப் பாயும் தோட்டாவை ரிலீஸ் செய்யும் அந்த நிறுவனம், அடுத்த மாதம் 20ம் தேதி ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள சீறு படத்தை வெளியிடுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள சுமோ படத்தையும், பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்கு ஜோஷ்வா இமை போல் காக்க படத்தையும், கோடை விடுமுறையில் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தையும் வெளியிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X