பேரே வேற மாதிரி இருக்கே.. கவுதம் மேனனின் குட்டி ஸ்டோரி டைட்டில் இதுதான்.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை: குட்டி ஸ்டோரியில் கவுதம் மேனன் இயக்கியிருக்கும் கதையின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏஎல் விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் குட்டி ஸ்டோரி.
இதில் விஜய் சேதுபதி, அமலா பால், அதிதி பாலன், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால், சங்கீதா, ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர்.

நிரம்பி வழியும் காதல்
ஆந்தாலஜி படமான இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. காதல் காட்சிகள் நிரம்பி வழியும் வகையில் உள்ளது. அதிலும் திருமணத்திற்கு மீறிய உறவுகள் அதிகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

என்னை பிடிக்குமா?
விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தாலும், அதிதி பாலனுடன் தொடர்பில் இருக்கிறார். இதைப்போலவே அமலாபாலும் திருமணமான ஆணுடன் நெருக்கமாக உள்ளார். அதிதி பாலன், உனக்கு என்னை பிடிக்குமா உன் பொண்டாட்டியை பிடிக்குமா என்று கேட்டும் மிரள விட்டுள்ளார்.

குட்டி ஸ்டோரி ட்ரெயிலர்
இதனால் இளைஞர்கள் மத்தியில் குட்டி ஸ்டோரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ட்ரெயிலர் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 13 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

எதிர்பாரா முத்தம்
இந்நிலையில் நான்கு கதைகளை கொண்ட இந்த குட்டி ஸ்டோரி படத்தில் கவுதம் மேனன் இயக்கியுள்ள கதையின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கவுதம் மேனன் இயக்கியிருக்கும் காதல் கதையின் டைட்டில் எதிர்பாரா முத்தம் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆத்மார்த்தமான காதல்
மேலும் இந்த கதை முழுக்க முழுக்க டீன்ஏஜ் காதல் மற்றும் ஆத்மார்த்தமனா, உணர்வுபூர்வமான காதலை மையப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமலா பால் மற்றும் ரோபோ ஷங்கர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவனும் நானும்..
இதனிடையே ஏஎல் விஜய் இயக்கியிருக்கும் கதைக்கு அவனும் நானும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாஷ் பிரதான் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பகுதிக்கு ஆர் மது இசையமைத்துள்ளார்.

லோகம்
இதனிடையே வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் பகுதிக்கு லோகம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் வருண் மற்றும் சாக்ஷி அகர்வால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடல் பாடல்..
அடுத்து நளன் குமாரசாமி இயக்கியிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இதற்கு ஆடல் பாடல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குட்டி ஸ்டோரி படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











