கௌதம் மேனன் வில்லனாக மிரட்டும் “மைக்கேல்“… போஸ்டரே தாறுமாறா இருக்கே !
சென்னை : கௌதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு மைக்கேல் திரைப்படத்தின் கலக்கலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கௌதம் மேனன் செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் கௌதம் மேனனுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கௌதம் மேனன்
காதலை கவிதைவடிவில் காவியமாக படைக்க கௌதம் மேனனால் மட்டுமே முடியும். மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என இன்னும் எத்தனையோ படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காதல் மனசுக்குள் புகுந்து தாக்கும்... என் கண் வழியாபாரு ஜெஸ்ஸி நீ எவ்வளவு அழகுனு தெரியும் என்ற வசனமும்.. ஒவ்வொரு படத்திலும் காதல் ரசம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாகவே இருக்கும்.

வில்லனாக
இயக்குனர், நடிகர்,பாடகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் மிரட்டி வருகிறார் மௌதம் வாசுதேவ் மேனன். கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக மிடுக்காக நடித்திருந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் கௌதம் மேனன் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார். இதையடுத்து, பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மாஸ் கெட்டப்பில்
இந்நிலையில், கௌதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு மைக்கேல் திரைப்படத்தின் ஸ்டைலிஸான போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், கௌதம் மேனன், சூட்கோட்டில் செம மாஸாக இருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மைக்கேல் படத்தில் கௌதம் மேனன் வில்லன் ரோலில் நடிக்க உள்ளார்.

பான் இந்திய படம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து மைக்கேல் என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இத்திரைப்படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











