அஜீத்துக்கு பெண் தேடி அலையும் கௌதம் மேனன்
சென்னை: கௌதம் மேனன் தனது இயக்கத்தில் நடிக்கும் அஜீத் குமாருக்கு ஏற்ற நாயகியை தேடி வருகிறாராம்.
கௌதம் மேனன் தற்போது ரொம்பவே பிசியாகிவிட்டார். சிம்புவை வைத்து ஒரு படத்தை துவங்கி பரபரவென வேலைகள் செய்து வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தெளிவாக முடிவு செய்து வைத்துள்ளார்.
சிம்புவை அடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கிறார்.

பிப்ரவரியில் படப்பிடிப்பு
அஜீத் குமாரை வைத்து எடுக்கும் படத்தின் படப்பிடிப்பை கௌதம் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறார். அதற்குள் சிம்பு பட வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று அவர் தீர்மானித்துள்ளார்.

சிம்புவுக்கு
சிம்புவுடன் நடித்தால் வம்பில் மாட்டிக் கொள்வோம் என்று தென்னிந்திய நடிகைகள் அஞ்சுகிறார்களாம். இந்நிலையில் கௌதம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பை நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.

அஜீத்துக்கு
கௌதம் மேனன் அஜீத் குமாருக்கு ஏற்ற நாயகியை தேடும் வேலையில் இறங்கிவிட்டாராம். முன்னணி நடிகைகள் கிடைக்காவிட்டாலும் டோலிவுட் அல்லது பாலிவுட்டில் இருந்து நாயகியை அழைத்து வர திட்டமிட்டுள்ளாராம்.

கௌதம் கார்த்திக்
கௌதம் மேனன் தான் தயாரிக்கும் நானும் ரவுடி தான் படத்தில் கௌதம் கார்த்திக்கை நாயகனாக்கியுள்ளார். படத்தின் வேலைகள் ஜனவரி மாதம் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications











