அவங்க ஹைட்டா இருக்காங்களே.. உயரத்தை நினைத்து கவலைப்பட்ட சூர்யா.. கௌதம் மேனன் ஷேரிங்ஸ்

சென்னை: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா படத்தை இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். அடுத்ததாக அவர் சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்கராவுடன் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா கதை கேட்கும் முறை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் விஜய்யுடன் தோன்றிய சூர்யாவை பலரும் விமர்சிக்கவே செய்தனர். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை என பலர் நேரடியாகவே கூறினர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.

Gautham Menon Share his experience About Varanam Aayiram Movie And Suriya

மாற்றம் தந்த நந்தா: நேருக்கு நேர் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த சூர்யாவுக்கு நந்தா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. பாலா இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க படமும் மெகா ஹிட்டானது. அந்த இரண்டு படங்களும்தான் சூர்யாவுக்கு ஆக்‌ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தன.

முன்னணி ஹீரோ: அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்கவும் செய்தன. இப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தன. பல படங்கள் அவரது பெயர் சொன்னாலும் சிங்கம் படம்தான் அவரை கொண்டுபோய் கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தில் நிறுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

கங்குவா: தற்போது அவர் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இதில் சூர்யாவுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில்தான் இப்படத்துக்கான டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துக்கொடுத்தார் சூர்யா.

பத்து மொழிகளில்: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருப்பது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பதும் இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அடுத்த படங்கள்: படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கிறார். சூரரைப் போற்று படத்தின் கூட்டணி இது என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கமாட்டார் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

வாரணம் ஆயிரம்: இப்படி சூர்யா படு பிஸியாக இப்போது இருக்கிறார். இந்தச் சூழலில் அவரை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்ற இரண்டு தரமான படங்களை இயக்கிய் கௌதம் மேனன் வாரணம் ஆயிரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "என் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை நான் எல்லோரும் தேர்வு செய்வதுபோல் தேர்வு செய்யமாட்டேன்.அது டெம்ப்ளேட்டுக்குள் இருக்காது.

கவலைப்பட்ட சூர்யா: வாரணம் ஆயிரத்தின்போது சமீரா ரெட்டி வேறுவிதமான சினிமா செய்துகொண்டிருந்தார். நான் அவரை தமிழுக்கு கொண்டு வந்தேன். அந்தச் சமயத்தில் சூர்யாவே என்னிடம் வந்து சமீரா ரெட்டி உயரமாக இருக்கிறாரே.. சரியாக வருமா என்று கேட்டார். கண்டிப்பாக சரியாக வரும் என்று நான் நம்பிக்கை கொடுத்த பிறகு அவர் நடித்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X