பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் அஜீத்-கௌதம் மேனன் படம்
சென்னை: அஜீத் குமாரை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்த படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று அஜீத் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில் கௌதம் மேனன் மீண்டும் சிம்புவை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார்.

துவங்கிய படப்பிடிப்பு
கௌதம் சிம்புவை வைத்து தான் இயக்குவதாக அறிவித்த படத்தின் படப்பிடிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கினார். சிம்பு படம் விண்ணைத் தாண்டி வருவாயாவின் இரண்டாம் பாகம் அல்ல என்று அவர் அறிவித்தார்.

காதல்
சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் காதல் படமாம். இதில் அவருக்கு ஜோடியாக மும்பை வரவு ஒருவர் நடிக்கிறார்.

அஜீத்
அஜீத்தை தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது என்று கௌதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வீரம்
அஜீத், தமன்னா நடிக்கும் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதனால் அஜீத் அந்த படத்தின் வேலைகளில் தற்போது பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











