எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை..கௌதம் மேனன் ரொம்ப ஃபீல் செய்றாரே
சென்னை: கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். மின்னலே தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயாவரை தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இவற்றில் வெந்து தணிந்து காடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கிடையே விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். மாதவன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இன்றுவரை அவரது படங்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுவருவதை வைத்தே உணர்ந்துகொள்ளலாம் அவர் எந்த அளவுக்கு ஃபார்மில் இருந்தார் என்று.

ஸ்டைலிஷ் இயக்குநர்: அதேபோல் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர்களில் கௌதம் மேனன் முக்கியமானவர். அவரது இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் அவ்வளவு அழகாக காட்சியளிப்பார்கள். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அத்தனையையுமே ஒட்டுமொத்தமாக மாற்றி வேறு ஒரு ஆளாக கேமரா முன் நிறுத்துவார் கௌதம் மேனன். இன்றுவரை சிம்பு, சூர்யா உள்ளிட்டோரின் ஆல்டைம் ஃபேவரைட் லுக் எது என்று ரசிகர்களிடம் கேட்டால் அதில் கௌதம் மேனன் இயக்கிய படத்தின் லுக்கும் இருக்கும்.
பிரச்னைகள்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக இயக்கத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். பிறகு பிரச்னைகளை சரி செய்வதற்காக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடிப்பிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் அவர் கடைசியாக ஜோஷ்வா இமைபோல் காக்க, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட்டானது.
துருவ நட்சத்திரம்: இதற்கிடையே விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்டோரை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கினார் விக்ரம். ஆனால் அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகாமல் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் சினிமாவில் தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் கௌதம்.
கௌதம் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சினிமாவில் எனக்கு உதவுவதற்கு யாருமே இல்லை என்பதுதான் உண்மை. ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் அந்தப் படம் நன்றாக ஓடுகிறதா என்று கவலைப்படுபவர்கள்தான் அதிகம். நான் சொல்வதை நம்புவதற்கு சங்கடமாக இருக்கலாம். இருந்தாலும் அதுதான் உண்மை. துருவநட்சத்திரம் படத்தைல் தாணு, லிங்குசாமி என சிலர் மட்டுமே பார்த்தார்கள்.
பிரச்னைகள் இருக்கின்றன: ஆனால் அவர்களுக்கு பிரச்னைகள் இருக்கின்றன. சில ஸ்டூடியோக்களுக்கு மட்டும்தான் நான் படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர்களோ வெளியில் சென்று இந்தப் படத்தை வாங்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.மக்கள் இன்னமும் என்னை ரசிப்பதால்தான் இத்துறையில் இன்னமும் இருக்கிறேன்.என்னால் அந்தப் படத்தை வெளியே கொண்டுவர முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











