கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா? கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதல் என விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Karthik dial seitha en review | Gautham Menon | AR Rahman | STR |Trisha

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் இதற்கான ஸ்க்ரிப்ட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை மையப்படுத்தி கார்த்திக் டயல் செய்த எண் படத்தை எடுத்திருந்தார்.

திருமணமான காதலி

திருமணமான காதலி

வீடியோ கால் மூலம் கவுதம் மேனன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதில் ஏற்கனவே திருமணமான நடிகை திரிஷாவுக்கு அவரின் முன்னாள் காதலரான சிம்பு போன் செய்து ஐ லவ் யூ, ஐ நீட் யூ என கூறுகிறார். அதனைக் கேட்கும் திரிஷா நீ என் குழந்தை போல என்று கூறுகிறார்.

அப்போதே சொன்னார்

அப்போதே சொன்னார்

இந்த படத்தை ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டினாலும் மறுபக்கம் கழுவி ஊற்றியுள்ளனர். கள்ளக்காதலை ஊக்கப்படுத்துகிறீர்களா என்று கேட்டு கவுதம் மேனனையும் விளாசி தள்ளினர். சமூக வலைதளங்களிலும் மீம்ஸ்கள் பறந்தன. இந்நிலையில் விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ள கவுதம் மேனன், இதுபோன்ற மீம்ஸ்கள் எல்லாம் வரும் என்று ஏற்கனவே சிம்பு கூறியிருந்தார்.

அது பெரிய வலி

அது பெரிய வலி

அவர் கூறியதை போலவே மீம்ஸ்கள் வந்தன. அவற்றை பார்த்ததும் சிம்புவுக்கு போன் செய்து நீங்கள் சொன்னது போலவே மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன என்று கூறினேன். முன்னாள் காதலி நண்பர்களாக இருப்போம் என்று கூறினால்தான் கேட்க கஷ்டமாக இருக்கும். அது பெரிய வலி.

அப்படி பார்த்தால் அப்படிதான்

அப்படி பார்த்தால் அப்படிதான்

ஆனால் நீ எனக்கு குழந்தை என்று கூறுவதன் மூலம் அவரை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வைக்கலாம் என்பதற்காக ஜெஸி அப்படி பேசுகிறார். என்னை பொறுத்தவரை அது ஒரு அழகான விஷயம். கள்ளக்காதல் என பார்ப்பவர்களுக்கு அப்படிதான் தெரியும். எனக்கு அப்படி தோன்றவில்லை.

அப்படி பேசியிருக்கிறார்

அப்படி பேசியிருக்கிறார்

இது அவரவர் பார்க்கும் பார்வையில் உள்ளது. என்னிடம் எந்த பெண்ணும் அப்படி பேசவில்லை. என் வாழ்வில் அப்படி நடக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு பெண் பேசியிருக்கிறார். அதைத்தான் நான் கார்த்திக் டயல் செய்த எண் படத்தில் பயன்படுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X