வெந்து தணிந்தது காடு 2 வருமா வராதா?.. கௌதம் மேனன் என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு தன்னுடைய மேக்கிங் மூலம் அதகளம் செய்பவர் அவர். இடையில் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார். தற்போது அவர் இயக்கத்தில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கியிருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அதுமட்டுமின்றி ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றவர் அவர். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் அவர் பெற்றவர்.

ஸ்டைலிஷ் இயக்குநர்: கௌதம் மேனன் கோலிவுட்டின் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவர். தனது ஒவ்வொரு படத்தையும் ப்ளெசண்ட்டாக, ஹீரோவை வேறு மாதிரியான ஒரு அழகாக காண்பிக்கக்கூடியவர் அவர். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட் படங்கள். அந்தப் படங்களில் அவரது லுக் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட். அதேபோல் கமல் ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு ஆகியோரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் கௌதம்.
காதல் இயக்குநர்: ஸ்டைலிஷ்ஷாக மட்டுமின்றி தன்னுடைய திரைக்கதை, வசனம், மேக்கிங் மூலம் அசரடிப்பவர் கௌதம் மேனன். அதேபோல் காதல் ஜானர் என்றால் மனிதர் உற்சாகமாகிவிடுவார். அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் ஜானர் படங்கள் உச்சத்தில் இருப்பவை. முக்கியமாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். ஆக்ஷன் ஜானரில் அவர் படம் எடுத்தால்கூட; அதில் அவரும் லவ் போர்ஷன் தனித்து தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒதுங்கிய கௌதம்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதனால் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் கௌதம் மேனன் தற்போது ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கியிருக்கிறார். படம் இன்று வெளியாகியிருக்கிறது.
வெந்து தணிந்தது காடு: இதற்கிடையே நடிப்பில் பிஸியான கௌதம் மேனன் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீடையும் கொடுத்திருந்தார். ஆனால் வெந்து தணிந்தது காடு 2 குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வரவில்லை. இந்தச் சூழலில் அவர் வெந்து தணிந்தது காடு 2 குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், " வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை நானும், ஜெயமோகனும் உருவாக்கிவிட்டோம். ஆனால் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் பிரச்னை இருக்கிறது. அது தீர்ந்துவிட்டால் வெந்து தணிந்தது காடு 2 தொடங்கப்படும்" என்றார்.


Click it and Unblock the Notifications











