Vijay - விஜய்யின் அரசியல் என்ட்ரி.. என்ன கௌதம் மேனன் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் போட்டியிடாமலும் இருக்கப்போகும் தவெக 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், நடிகருமான கௌதம் மேனன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்தததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். அதேசமயம் நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் மக்கள் இயக்கம் நிறுத்தவில்லை. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டது.

அரசியல் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு நோ: கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடவே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக பெரும்பாலானோர் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு நோ: விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதுதான். ஆனால் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்குவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள்கூட விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவதை அவ்வளவாக விரும்பவில்லை. சிறந்த எண்ட்டெர்டெயினர் விஜய். அதற்குள் அவரது ERA முடிந்துவிட்டதா என்று நம்ப முடியாமல் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுவதையும் பார்க்க முடிகிறது.
கௌதம் மேனன் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் ஜோஷ்வா இமைபோல் காக்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அப்படக்குழு செய்தியாளர்களை இன்று சந்தித்தது. அப்போது கௌதமிடம் செய்தியாளர்கள், விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அவரது இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் கௌதம் ஏன் இப்படி சொல்கிறார். ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்ததில் கௌதம் மேனனுக்கு விருப்பம் இல்லையோ என்று கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











