நயன்தாரா திருமணத்தை படமாக்கும் கௌதம் மேனன்.. ஆத்தாடி இது என் ன புது கதையா இருக்கு !
சென்னை : நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தை படமாக இயக்க இயக்குநர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
நானும் ரவுடி தான் படத்தின் போது மலர்ந்த இவர்களது காதல் இன்றளவும் நீடித்து வருகிறது.

5 வருட காதல்
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், கிட்டத்தட்ட 7 வருடத்திற்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இந்த க்யூட் ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நெற்றிக்கண் ப்ரோமோஷனின் போது, இருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக க கூறியிருந்தார் நயன்தாரா.

மகாபலிபுத்தில் திருமணம்
இதையடுத்து, இவர்கள் இருவரின் திருமண தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தனர். இதையடுத்து, வரும் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டநிலையில் பின்னர் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

பிரம்ம முகூர்த்தத்தில்
அந்தத்தகவலின் படி, மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபவ் ஸ்டார் ஹோட்டலில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான பிரம்மா முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த நயன்தாரா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

30 பேருக்கு அழைப்பிதழ்
இதனால், வெறும் 30 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், குறிப்பாக ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கௌதம் மேனின் புது ஐடியா
இந்நிலையில், திருமணம் குறித்த சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது. இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் இவர்களது திருமணத்தை ஆவணப்படமாக இயக்க இருப்பதாவும் கூறப்படுகிறது. அதனை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால்,எந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரிவில்லை.


Click it and Unblock the Notifications











