மீண்டும் இணைந்து மிரட்ட தயாராகும் கௌதம் மேனன் சூர்யா கூட்டணி!
Recommended Video
சென்னை: மீண்டும் இணைகிறார்கள் கெளதம் மேனனும், நடிகர் சூர்யாவும்.
வெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் எடுத்த கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

இதையடுத்து, ஒரு தனியார் ஊடகத்தில் பேட்டி அளித்த மேனன், மீண்டும் சூர்யாவோடு இணைந்து படம் இயக்க இருப்பதாக கூறினார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக கூறிய இவர், 2020ல் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்தார்.
கெளதம் மேனனின் இரண்டாவது படமான காக்க காக்க மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அதுவரை பார்க்காத சூர்யாவை நாம் பார்த்திருப்போம், ஒரு நேர்மையான போலீஸ்காரரான, அன்புச்செல்வன் கதாபாத்திரத்தை இன்றும் நம்மால் மறக்க முடியாது. அதே கூட்டணி மீண்டும் 2008ல் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்தது. அந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திலும் சூர்யா இரட்டை வேடத்தில் அசத்தலாக நடித்து இருப்பார்.

இந்த இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா கௌதம் இணைந்தாலே வெற்றிதான் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் ஏகத்துக்கும் குசியாகி உள்ளனர்.



Click it and Unblock the Notifications











