பத்து தல படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்!

சென்னை: சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் தான் பத்து தல.

இந்த படத்தை கிருஷ்ண குமார் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பிரபல இயக்குனரான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் கசிந்துள்ளது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

கவுதம் மேனன் படங்களை இயக்கி வெளியிடுவதில் சில வருடங்களாக தாமதம் ஏற்படுத்தி வருகிறார். இதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். கடந்த ஆண்டில் ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரான்ஸ், பாவ கதைகள் (வான் மகள்) என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

ட்ரான்ஸ் திரைப்படம்

ட்ரான்ஸ் திரைப்படம்

கடந்த ஆண்டு அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான ட்ரான்ஸ் என்னும் மலையாளம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் கவுதம் மேனன். யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய வில்லத்தனத்தை அசத்தலாக வெளிப்படுத்தி இருந்தார் கவுதம் மேனன். அந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது.

தரமான கூட்டணி

தரமான கூட்டணி

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இந்த கூட்டணி தரமான கூட்டணியாக அமைந்தது. கவுதம் மேனன் பத்து தல படத்தில் வில்லன் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானால் ஹீரோ - வில்லனாக இவர்களின் காம்போ முதல் முறையாக களம் காணும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Mufti எனும் கன்னட படத்தின் மறு ஆக்கமான பத்து தல திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான நடிகர்கள் தேர்வு காரணமாக மேலும் ஆர்வமும் கூடியுள்ளது. இந்நிலையில் கவுதம் மேனன் தான் வில்லன் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் அதனை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர். இது உண்மையானால் இந்த கூட்டணி பட்டாசாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X