விடுதலை படத்தில் இணையும் மற்றுமொரு பிரபலம்… எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதியைத் தொடர்ந்து மற்றுமொரு பிரபலமும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பல காட்சிகள் சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன.

ஹீரோவாக
அசுரன் பட வெற்றியை அடுத்து பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன் அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுநாள் வரை நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக இருந்த சூரி இந்த படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

லீட் ரோலில்
விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை ஆர்எஸ் ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

பாராட்டுக்களை பெற்றது
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் உள்ளனர். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

காவல்துறை அதிகாரியாக
இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் காவல்துறை உயர் அதிகாரியாக நடிக்க உள்ளார். இவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவாக இருப்பார் என வெற்றிமாறன் கருதியதால், அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காவல்துறை அதிகாரியாக கௌதம் மேனன் அசத்தி இருப்பார்.


Click it and Unblock the Notifications











