கௌதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு... சிறப்பான காரணம்தான்

சென்னை : யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது மண்டேலா படம்.

அனைத்து தரப்பினரும் இந்த படத்தின் உருவாக்கம் குறித்தும் யோகிபாபு நடிப்பு குறித்தும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

மண்டேலா படம்

மண்டேலா படம்

யோகிபாபு தன்னுடைய நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் மண்டேலா படம் ஓடிடியில் வெளியானது.

சிறப்பான கதைக்கரு

சிறப்பான கதைக்கரு

பல்வேறு தரப்பினரையும் இந்தப்படம் கவர்ந்துள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதனின் வாக்கு எவ்வாறு ஜனநாயகத்தையே புரட்டிப் போடுகிறது என்பதை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் உருவாக்கமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

யோகியை இயக்க ஆவல்

யோகியை இயக்க ஆவல்

இந்நிலையில் இந்த படம் குறித்து டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். படக்குழுவினருக்கும் யோகிபாபுவிற்கு பாராட்டு தெரிவித்த அவர், கூடிய விரைவில் யோகிபாபுவுடன் இணைந்து வேலை செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

யோகி பாபு நன்றி

யோகி பாபு நன்றி

சிறந்த நகைச்சுவை மற்றும் மிகவும் சிறப்பான படம் மண்டேலா என்றும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவரது பாராட்டுக்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X