வடிவேலுவுக்காக தயாரான காதல் கதை… இயக்குநர் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க !

சென்னை : கௌதம் மேனன் நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதுமே மீண்டும் பழைய உற்சாகத்தோடு, வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

இதையடுத்து வடிவேலு புது உத்வேகத்துடன் பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நடிகர் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின் நடித்து வரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின் சிகிச்சை பெற்று நலமடைந்த வடிவேலு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பை விரைவில் முடித்து வருகின்ற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பிரபு தேவாவுடன்

பிரபு தேவாவுடன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளாராம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பாடல் கலக்கலாக அமைந்துள்ளது. இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைக்கின்றார். பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

சூப்பர் மோஷன் போஸ்டர்

சூப்பர் மோஷன் போஸ்டர்

இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில், , புல்லட்டில் பறந்து வருகிறார் நாய் சேகர். பச்சை நிற உடையில், முடியெல்லாம் பறந்து பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறார் வடிவேலு. சிங்கிளாக வராமல் தன்னுடைய புல்லட்டில் மூன்று நாய்களையும் ஏற்றி வருகிறார் இந்த மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது.

காதல் கதை

காதல் கதை

இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள கெளதம் மேனன், இந்த படம் ஒரு காதல், காமெடி படமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரை அணுகியதாகவும், வடிவேலுவும் சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளாராம். இதுகுறித்த, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X