ஆறு மாதம் கால்ஷீட்.. அருண்விஜய்யிடம் கேட்டிருக்கும் கவுதம் மேனன்!

By Shankar

சென்னை: அருண் விஜய்யை கதாநாயகனாக்கி இயக்கவிருக்கும் படத்துக்காக அவரிடம் தொடர்ந்து ஆறு மாதங்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம் கவுதம் மேனன்.

திருப்பதியில் மொட்டையடிப்பவர் வரும் கஸ்டமர்களை விடக் கூடாது என்று பாதி வழித்து உட்கார வைத்து விட்டு அடுத்த கஸ்டமரை பார்ப்பார். இப்படி வரிசையாக பாதி வழிந்த நிலையில் 10, 20 பேர் காத்திருப்பார்கள். அதேபோல் கவுதம் மேனன் ஆரம்பித்துவிட்டு நிற்கும் படங்களின் ஹீரோக்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Gautham Menon wants six months dates from Arun Vijay

முதலில் அச்சம் என்பது மடமையடா ஆரம்பித்தார். அஜித் அழைக்கவே அவருக்கு என்னை அறிந்தால் முடித்துக் கொடுத்தார். மீண்டும் அச்சம் என்பது மடமையடா வரும்போது சிம்பு சிக்கல் பண்ண தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா தொடங்கினார். சிம்பு படத்தை முடித்து விட்டு இப்போது விக்ரம் படம் தொடங்கியுள்ளார். தோட்டா அந்தரத்தில் நிற்கிறது.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் போது கொடுத்த வாக்குறுதி படி அருண்விஜய்யை இயக்கவிருக்கிறாராம் கவுதம் மேனன். இந்த படத்துக்காக ஆறு மாதங்கள் தொடர்ந்து கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். அனேகமாக அருண் விஜய் கவுதம் மேனன் படம் துவங்குவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்து விடலாமே? என்று திட்டமிட்டு ஒரு படம் துவங்க வாய்ப்பிருக்கிறதாம்.

கேர்ஃபுல்லா தான் இருக்கார் அருண்விஜய்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X