Don't Miss!
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சீரியசாக அபத்த கேள்வி கேட்ட செய்தியாளர்..’நான் மணிரத்னம் என்பதால் சாத்தியம்’ குழப்பிய கவுதம் மேனன்
சென்னை: இயக்குநர் கவுதம் மேனனிடம் மணிரத்னம் படத்தை சொல்லி எப்படி இயக்க முடிந்தது என அபத்த கேள்வி கேட்டார் செய்தியாளர்.
அவருக்கு தரமான சரியான பதிலை சிரித்துக்கொண்டே சொல்லி அவரை குழப்பிவிட்டார் கவுதம் வாசுதேவ மேனன்
நான் யாரிடம் கேள்வி கேட்டேன், இவர் கவுதம் மேனன் தானே எனக் குழப்பமடைந்த சுவாரஸ்ய நிகழ்ச்சி தெலுங்கு டிவி ஷோவில் நடந்துள்ளது.
நயன்தாரா திருமண வீடியோ படத்தை இவர் இயக்கவில்லையா?..கவுதம் மேனன் சொல்லும் புதுக்கதை

கவுதம் மேனனை ஒரு கணம் திணறடித்த செய்தியாளர்
நடிகர் சிம்புவை வைத்து வெந்துதணிந்தது காடு படத்தை இயக்கினார் கவுதம் மேனன். படம் வெளிவந்த நிலையில் அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகிறார். படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளதால் தெலுங்கு ஆடியன்ஸ்க்காக ஆந்திராவில் டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வெந்து தணிந்தது காடு பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர் புத்திசாலிதனமாக அடுத்த கேள்வியை வீசினார். அது கவுதம் மேனனே எதிர்பாராத கேள்வி.

செக்கச்சிவந்த வானம் படம் எப்படி எடுத்தீர்கள்-கவுதம் மேனனிடம் கேட்ட நிருபர்
நீங்கள் எடுத்த செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், அரவிந்த்சாமி ஆகியோரை வைத்து எப்படி இந்த படத்தை இயக்கினீர்கள் எனக்கேள்விக்கேட்டார். அவருக்கு செக்கச் சிவந்த வானம் படம் மணிரத்னம் இயக்கிய படம் என்பது கூட தெரியவில்லை. அவரது கேள்வியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துதான் போனார். அடப்பாவி யார் கிட்ட எந்த கேள்விய கேட்கிற, உன் கேள்வியில் தீய வச்சு கொளுத்த, என்பது போல் ஒரு செகண்ட் பார்த்த அவர் பின் டக்கென்று இயல்பு நிலைக்கு மாறினார்.

நான் மணிரத்னம் அல்லவா செய்தியாளரை குழப்பிய கவுதம் மேனன்
அப்படியா கேட்கிற இப்ப பதில் சொல்கிறேன் பார் உன் கேள்விக்கு என்று சொல்லி, நீங்கள் கேட்பதுபோல் விஜய் சேதுபதி, அரவிந்த சாமி, சிம்பு, அருண்விஜய் இவர்கள் 4 பேரை வைத்து படம் இயக்குவது கஷ்டம் தான் ஆனால் பாருங்கள் நான் மணிரத்னம் அல்லவா அதனால் அது சாத்தியமானது என்று சிரித்தப்படியே கூறினார். இதை கேட்டு அந்த செய்தியாளருக்கு மயக்கம் வராத குறை. நான் கேள்வி கேட்பது கவுதம் மேனனிடமா அல்லது மணிரத்னமா என குழம்பி போய்விட்டார். அவரை கவுதம் வாசுதேவ மேனனன் வச்சு செய்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை.

கவுதம் மேனனின் கிண்டல் பதில் வைரலாகும் மீம்ஸ்
செக்கச்சிவந்த வானம் மணிரத்னம் எடுத்த படம் என்பது கூட புரியாமல் ஒரு பெரிய இயக்குநரிடம் கேள்வி கேட்க வரும்போது அவரது படம் எது எது என்கிற குறைந்தப்பட்ச ஹோம்வர்க் கூட பண்ணாமல் வந்து கேள்வி கேட்கும் பல செய்தியாளர்கள் உள்ளனர். சிலர் எல்லோரும் கேட்டு முடித்த கேள்வியை கடைசியில் சிவாஜி செத்துட்டாரா என்பதுபோல் கேட்பதும் உண்டு. தற்போது சமூக வலைதளங்களில் அந்த செய்தியாளரின் கேள்விக்கு கவுதம் மேனன் சொல்லும் பதில் தான் மீம்ஸாக மாற்றப்பட்டு வைரலாகிறது.