ரிலீசானது எனை நோக்கிப் பாயும் தோட்டா.. கெளதம் மேனன் கண்களில் ஆனந்த கண்ணீர்!
Recommended Video
சென்னை: தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் தற்போது வெளியாகியுள்ளது.
எனை நோக்கிப் பாயும் தோட்டா FDFSஐ தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் காலை முதல் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் ஆனந்த கண்ணீருடன் படத்தை பார்த்தார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
மூன்று ஆண்டுகள் கழித்து படம் வெளியானாலும், தனுஷ் ரசிகர்களின் வெறித்தனம் சற்றும் குறையவில்லை காலையிலேயெ தியேட்டர்களில் பட்டாசுகளை வெடித்து FDFS கொண்டாட்டங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். தியேட்டரில் தனுஷ் வரும் அறிமுக காட்சிகளை மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையிலேயே ரிலீஸ் ஆகிடுச்சு
பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் ரிலீசாகமால் தவித்து வந்த தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா உண்மையிலேயே இந்த முறை ரிலீஸ் ஆகிடுச்சு என்பதை சூப்பர் டீலக்ஸ் மீம்ஸ் போட்டு இந்த நெட்டிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன்
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க எனை நோக்கிப் பாயும் தோட்டா இயக்குநர் வந்திருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீசாகியுள்ள நிலையில், கெளதம் கண்களில் ஆனந்த கண்ணீர் பூக்க படத்தை பார்த்துள்ளார்.
தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
எனை நோக்கிப் பாயும் தோட்டா இன்று நிச்சயம் ரிலீசாகிறது என இறுதியாக நடிகர் தனுஷ் ட்வீட் போட்ட நிலையில், தியேட்டரில் தனுஷ் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், படம் வெற்றி பெறவும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
சிங்கிள் பசங்க
எனை நோக்கி பாயும் தோட்டா ஷூட் அப்பவும் சிங்கிள், டிரைலர் ரிலீஸ் அப்பவும் சிங்கிள், படம் ரிலீஸ் அப்பவும் சிங்கிள் என இந்த நெட்டிசன் படம் ரிலீசாக ரொம்ப நாளானதை கலாய்த்துள்ளார்.
துருவ நட்சத்திரம் எப்போ?
எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை போலவே கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படமும் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகும் என கெளதம் மேனன் அறிவித்திருந்த நிலையில், அந்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட வேண்டும் என விக்ரம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











