மம்மூட்டி - கௌதம் மேனன் கூட்டணி.. Dominic Ladies Purse அப்டேட் என்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: கோலிவுட்டில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வந்துகொண்டிருந்தவர் கௌதம் மேனன். சூர்யாவின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் அவர் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருந்தவர். இடையில் சில காரணங்களால் அவரால் படம் இயக்க முடியாமல் இருந்தது. அதேசமயம் நடிப்பில் படு பிஸியாக காணப்பட்டார். இந்தச் சூழலில் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கௌதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாதவன், ரீமாசென், நாகேஷ், விவேக் என பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. முதல் படத்திலேயே தனது தடத்தை ஆழமாக பதித்துவிட்ட அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட யோசிக்கவே இல்லை. அதன்படி அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன.

தவம் இருந்த ஹீரோக்கள்: சூர்யாவின் கரியரில் காக்க காக்க திரைப்படம் முக்கியமானது. நந்தா திரைப்படம் எப்படி அவருக்குள் இருந்த நடிகரை வெளியே கொண்டு வந்ததோ அதேபோல் காக்க காக்க படம் அவருக்கு நல்ல கமர்ஷியல் ப்ளஸ் ஆக்ஷன் ஹீரோ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது. இன்றுவரை அந்தப் படம் பலருக்கும் ஃபேவரைட்தான். கௌதம் மேனனின் முதல் இரண்டு படங்களுமே ஹிட்டடித்திருந்ததால் அவரது இயக்கத்தில் நடித்தால் நல்ல காலம் உண்டு என்று ஹீரோக்கள் தவம் இருக்கவும் செய்தார்கள்.
க்ளாஸிக் படங்கள்: தொடர்ந்து கௌதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக காலங்கடந்தும் அவரது படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யுடன் அவர் யோஹன் படத்தில் இணையவிருந்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பானது. அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படம் செய்தார். அந்தப் படமும் அஜித்தின் கரியரில் வித்தியாசமான படமாக இருந்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா: அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. மேலும் காதல் படங்களின் லிஸ்ட் என்றாலே அதில் அந்தப் படத்துக்கு தனியிடம் உண்டு. இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக அவர் இயக்கத்திலிருந்து ஒதுங்கினார். இருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கினார். ஆனால் இன்றுவரை அந்தப் படம் ரிலீஸாகவில்லை. ஸ்டைலிஷ் இயக்குநருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் உச் கொட்டினர்.
நடிப்பில் பிஸி: இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர் நடிப்பில் பிஸியானார். அந்தவகையில் அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, கருமேகங்கள் கலைகின்றன என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தும்வருகிறார். இயக்கம் போலவே நடிப்பிலும் தனது திறமையை அசால்ட்டாக காண்பித்துவருகிறார் கௌதம் மேனன். இந்தச் சூழலில் அவர் மீண்டும் படம் இயக்க வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
மம்மூட்டியுடன் கூட்டணி: அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக மம்மூட்டியை வைத்து டாமினிக் லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கிவருகிறார். நீண்ட நாட்கள் கழித்து கௌதம் இயக்கம் என்பதாலும்; மம்மூட்டியுடன் முதன்முறை அவர் இணைவதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படு ஸ்டைலிஷாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் கௌதம் மேனன். அதன்படி படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











