கௌதம் மேனனின் டாமினிக்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வந்துவிட்டது அறிவிப்பு

சென்னை: கோலிவுட்டில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வந்துகொண்டிருந்தவர் கௌதம் மேனன். சூர்யாவின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் அவர் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருந்தவர். இடையில் சில காரணங்களால் அவரால் படம் இயக்க முடியாமல் இருந்தது. அதேசமயம் நடிப்பில் படு பிஸியாக காணப்பட்டார். இந்தச் சூழலில் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் அவர்.

ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கௌதம் மேனன் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாதவன், ரீமாசென், நாகேஷ், விவேக் என பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. முதல் படத்திலேயே தனது தடத்தை ஆழமாக பதித்துவிட்ட அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணம் போட யோசிக்கவே இல்லை. அதன்படி அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன.

gautham menon mammootty

சூப்பர் ஹிட்டுகள்: கௌதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக காலங்கடந்தும் அவரது படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யுடன் அவர் யோஹன் படத்தில் இணையவிருந்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பானது. அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படம் செய்தார்.

அந்தப் படமும் அஜித்தின் கரியரில் வித்தியாசமான படமாக இருந்தது. இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த கௌதம் மேனனுக்கு சில பிரச்னைகள் வந்தன. அதன் காரணமாக அவர் இயக்கத்திலிருந்து ஒதுங்கினார். இருந்தாலும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கினார். ஆனால் இன்றுவரை அந்தப் படம் ரிலீஸாகவில்லை. ஸ்டைலிஷ் இயக்குநருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் உச் கொட்டினர்.

நடிப்பில் பிஸி: இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர் நடிப்பில் பிஸியானார். அந்தவகையில் அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், லியோ, கருமேகங்கள் கலைகின்றன என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்தும்வருகிறார். இயக்கம் போலவே நடிப்பிலும் தனது திறமையை அசால்ட்டாக காண்பித்துவருகிறார் கௌதம் மேனன். இந்தச் சூழலில் அவர் மீண்டும் படம் இயக்க வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.

மம்மூட்டியுடன் கூட்டணி: அந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக மம்மூட்டியை வைத்து டாமினிக் லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து கௌதம் இயக்கம் என்பதாலும்; மம்மூட்டியுடன் முதன்முறை அவர் இணைவதாலும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்தத். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படு ஸ்டைலிஷாக இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தப் படமானது ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X