மலையாளத்தில் மாஸ் காட்டிய கௌதம் மேனன்… டோமினிக் & த லேடீஸ் பர்ஸ் படத்தின் வசூல்!

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கௌதம் வாசு தேவ மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள டோமினிக் & த லேடீஸ் பர்ஸ். இப்படத்தில் கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வீனித் ஆகியோர் நடித்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

மின்னலே படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன்.காக்க காக்க,வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ்சினிமாவில் ஒரு முக்கிய இயக்குநராக இருந்தார். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கிய அச்சம் என்பது மடைமையடா,எனை நோக்கி பாயும் தோட்டா என அடுத்தடுத்து படம் தோல்வியைத் தழுவியது.

dominic and the ladies purse box office amp amp

இதையடுத்து மீண்டும்,சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் கௌதம் மேனன் கம்பேக் கொடுத்தார். தற்போது, இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை வைத்து டோமினிக் & த லேடீஸ் பர்ஸ் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளிவந்த Dominic and the Ladies' Purse திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த மம்முட்டி சில பிரச்சனைகள் காரணமாக அந்த வேலையில் இருந்து விலகி தனியாக பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை தொடங்குகிறார். அதில் போதுமான வருமானம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்.

டோமினிக் & த லேடீஸ் பர்ஸ்.படத்தின்: அந்த நேரத்தில் வீட்டின் உரிமையாளர் ஒரு பர்ஸை கொடுத்து இந்த பர்ஸ் யாருடையது என்று கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதையெல்லாம் ஒரு வேலையா என்று சொல்ல, இதை மட்டும் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த வீட்டிற்கான வாடகை பாக்கி தர வேண்டாம் என்று சொல்ல அந்த பர்ஸ் யாருடையது என்று கண்டுபிடித்து விடுகிறார்.இதையடுத்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் Dominic and the Ladies' Purse படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Read more about: box office வசூல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X