ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து மிரட்டும் "செல்ஃபி"

சென்னை : அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி.

இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் மதிமாறன்

இயக்குனர் மதிமாறன்

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்து

ரசிகர்களை கவர்ந்து

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிகம் மெனக்கெட்டு

அதிகம் மெனக்கெட்டு

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இருவருமே இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள் .நிறைய லோகேஷன்ஸ் வித விதமான காட்சிகள் என்று திரைக்கதையில் மிகவும் சுவாரஸ்யம் கூடும் வகையில் ட்விஸ்ட் நிறைய இருக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது .

ரிலீஸ் செய்ய திட்டம்

ரிலீஸ் செய்ய திட்டம்

பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த நிலையில் படத்தின் ப்ரமோஷன்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொருவரும் செய்ய தொடங்கி விட்டனர். 2021 இறுதிக்குள் இந்த படம் வெளி வரும் என்றும் குறிப்பாக நவம்பர் மாதம் தியேட்டர் ரிலீஸ் செய்யலாம் என்றும் இந்த குழு முடிவு செய்து உள்ளது . "செல்ஃபி" என்ற தலைப்பு கொண்டதால் நிறைய கேள்விகள் இந்த படத்தை பற்றி எழுந்து உள்ளது . இன்னொரு பக்கம் இந்த டைட்டில் கடைசி நேரத்தில் தமிழில் மாற்றப்படும் என்றும் சொல்லி வருகின்றனர் . ரிலீஸ் சமயத்தில்தான் எல்லா முடிவுகளும் தெரியவரும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X