முதன்முறையாக இணையும் இரு ஜாம்பவான்கள்.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி !

சென்னை : பொதுவாக மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஒன்றாக இணையும் திரைப்படம் என்றாலே அதற்கான எதிர்பார்ப்பு அமோகமாக இருக்கும்.

இந்த நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இருவரும் முதல்முறையாக இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் பல ஆண்டுகளாக இவர்கள் இருவரது கூட்டணியில் திரைப்படம் உருவாகுமா என கேட்டு வந்த நிலையில் தற்போது அது நிறைவேற உள்ளது.

விடியலுக்காக

விடியலுக்காக

மிக கடுமையான சூழ்நிலையில் கொரானா நோய்த்தொற்றின் காரணமாக படப்பிடிப்புக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு திரையுலகமே விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பலரும் தாங்கள் உருவாக்கி வைத்திருந்த படைப்புகளை திரையில் வெளியிட பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திரையில்

திரையில்

தற்பொழுது மாதங்கள் பல கடந்து கொண்டே போவதால் ஒவ்வொரு படங்களாக OTT என்ற டிஜிட்டல் பிளாட்பார்மில் தங்களது படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். எனினும் பல உச்ச நட்சத்திரங்களின் படங்கள் திரையில் வெளியிட வெகு நாட்களாக திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

கை தேர்ந்தவர்

கை தேர்ந்தவர்

இந்திய அளவில் காதல் படங்கள் சிறப்பாக எடுப்பதில் கை தேர்ந்தவராக விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனன் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார். நிலையில் 2010 ஆம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி அடைந்து இன்று வரை அந்த காதல் கதை பேசப்பட்டு வருகிறது.

வெளியாக காத்திருப்பு

வெளியாக காத்திருப்பு

அதன் சீக்குவலாக அதே நடிகர்களை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இந்த லாக்டவுன் சமயத்தில் இயக்கி வெளியிட்டிருந்தார். அது பல்வேறு சர்ச்சைகளை தாண்டி பலரையும் ஈர்த்து வந்த நிலையில் இவர் இயக்கி வரும் ஜோஷ்வா இமைபோல் காக்க மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற திரைபடங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.

மாயாஜாலவித்தை

மாயாஜாலவித்தை

இந்திய அளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் பிசி. ஸ்ரீராம் பல படங்களுக்கு தனது அட்டகாசமான ஒளிப்பதிவின் மூலம் பல பெயரையும், வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார். மேலும் இவர் மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மாயாஜால வித்தைகளை நிகழ்த்தி வருகிறார்.

பல படங்களை இயக்கியுள்ளார்

பல படங்களை இயக்கியுள்ளார்

இந்நிலையில் இவர் ஒளிப்பதிவு செய்து மணிரத்னம் இயக்கிய நாயகன் மற்றும் கீதாஞ்சலி போன்ற படங்களுக்கு சிறந்த ஒளிப்பதிவிற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இவ்வாறு ஒளிப்பதிவில் சிறந்து விளங்கி வரும் இவர் மீரா, குருதிப்புனல், வானம் வசப்படும், தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

மிகப்பெரிய குறை

மிகப்பெரிய குறை

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் பிசி ஸ்ரீராம் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாதது மிகப் பெரிய குறையாகவே இருந்து வந்தது. மேலும் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரின் கூட்டணியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வேளையில் தற்போது அவர்களுக்கு ஒரு மாஸான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

முதல்முறையாக

முதல்முறையாக

பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார், அதில் கௌதம் வாசுதேவ் மேனனும் தானும் முதல்முறையாக இணைந்து ஒரு வெப் சீரிஸில் பணியாற்ற உள்ளதாகவும், அதை அமேசான் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த லாக்டவுன் பீரியட் முடிந்தவுடன் இதன் வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் ஒரு மாஸான அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆவலுடன் காத்திருப்பு

ஆவலுடன் காத்திருப்பு

இரண்டு ஜாம்பவான்கள் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாத நிலையில் பல வெற்றி படங்களை இவர்கள் தனித்தனியாக கொடுத்து வந்த நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கும் வெப் சீரிஸை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X