Rapid fire கேள்வி..டக்கு டக்குனு பதிலளித்த கௌதம் மேனன்..நீங்க கேட்க நினைத்த கேள்வி இதுவா?

சென்னை : இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அரிதான படைப்பாளியான கௌதம் மேனன், வணிக கட்டாயங்களை மீறி தனக்குள் இருக்கும் படைப்பை துளியும் நீர்த்துப்போகச் செய்துவிடாதவர்.

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கௌதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபிட் பயர் கேள்வி டக்கு டக்குனு பதிலளித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 15ந் தேதி வெளியானத் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பிடித்தது , பிடிக்காது, அடுத்தப்பட தகவல் என பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

துருவநட்சத்திரம் எப்போது ரிலீஸ்

துருவநட்சத்திரம் எப்போது ரிலீஸ்

அதில் துருவநட்சத்திரம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த கௌதம், அந்த படம் சில சூழ்நிலையால் வெளியிட முடியாமல் போய்விட்டது ஆனால், அடுத்த வாரம் முழுவதும் அந்த படத்தின் சிஜி வேலை மற்றும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். துருவநட்சத்திரம் திரைப்படம் இந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியாகும் என்றார்.

GVM 21

GVM 21

GVM 21 திரைப்படம் ஆக்ஷன் படமா ரொமான்ஸ் படமா என்ற கேள்விக்கு பதிலளித்த, அவர் ரொமான்ஸ் படம் என்றார். மேலும் நண்பர்களுடன் பொழுது போக்கு அல்லது உடற்பயிற்சி செய்வீர்களா என்ற கேள்விக்கு நண்பர்களுடன் பொழுது போக்கு என்று பதில் கூறிய கெளதம் மேனன், பயணம் செய்வதில் ரயில் பயணம் பிடிக்குமா? சாலை பயணமா? என்ற கேள்விக்கு அவர் ரயில் என்றார்.

பிடித்தது நடிப்பா..பாடுவதா

பிடித்தது நடிப்பா..பாடுவதா

சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் எதில் விருப்பம் என்ற கேள்விக்கு சாக்லேட் என்று பதிலளித்த கெளதம் மேனன், நடிப்பு, பாடுவது இதில் எதில் ஆர்வம் என்ற கேள்விக்கு நடிப்பு என்றார். கல்லூரி மற்றும் பள்ளி வாழ்க்கையில் எது சிறந்தது என்ற கேள்விக்கு கல்லூரி என்று பதிலளித்தார் கெளதம் மேனன் நண்பர்களுடன் பயணம் அல்லது தனியாக பயணம் என்பதில் தனியாக பயணம் செய்வதே தனக்கு பிடிக்கும் என்றார்.

பிடித்த நடிகர் யார்?

பிடித்த நடிகர் யார்?

பிடித்த இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், பிடித்த இயக்குநர் மணிரத்னம் பிடித்த நடிகர் கமல்ஹாசனா அல்லது அமிதாப்பச்சனா என்ற கேள்விக்கு கமல் ஹாசன் என்றார். ஒருவேளை இயக்குநராகாமல் இருந்தால் தான் கிரிக்கெட் பிளேயராகி இருந்து இருப்பேன் என்று ஒவ்வொரு கேள்விக்கும் சும்மா டக்கு டக்குனு பதிலளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X