Dominic Blue Satttai Maran Review: கௌதம் மேனனை நம்பிய மம்மூக்கா.. பிரிச்சு மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்து நேற்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, நடிக்க ஒப்புக் கொண்டது மட்டும் இல்லாமல், படத்தை தயாரிக்கவும் மம்மூட்டி ஒப்புக் கொண்டதால், ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.
படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் படம் பார்த்த பலரும் படம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சிம்பு நடித்து, ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து வெளியான இந்தப் படம், மாபெரும் வெற்றிப் படமாக மாறவில்லை என்றாலும், வணிக ரீதியாக நஷ்டத்தை சந்திக்காத படம் என கூறப்படுகின்றது.

ஆனாலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகி கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள படம், துருவ நட்சத்திரம். இந்தப் படத்தினை ரிலீஸ் செய்யத்தான், கௌதம் பல படங்களில் நடித்து நிதி தயார் செய்துகொண்டு உள்ளார் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் இவரது இயக்கத்தில் டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

விமர்சனம்: இந்தப் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ள விமர்சனம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையைப் பொறுத்தவரையில், ஹீரோ முன்னாள் போலீஸ் அதிகாரி. அவர் காவல்துறையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் வேலையை விட்டு வெளியே வந்து, தானே சொந்தமாக தனியார் டிடக்டிவ் ஏஜென்சீஸ் வைத்து நடத்தி வருகின்றார். வீட்டு வாடகை கூட தர முடியாத அளவிற்குத்தான், தனது டிடக்டிவ் ஏஜென்சீஸை மிகவும் கஷ்டப்பட்டு நடத்தி வருகின்றார்.

கதை: இந்த காலகட்டத்தில் அவரது ஹவுஸ் ஓனர், எனக்கு ஒரு லேடீஸ் பர்ஸ் கிடைத்துள்ளது. இது யாருடையது என தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால், நீ எனக்கு தரவேண்டிய வாடகையைத் தரவேண்டாம் எனக் கூறுகின்றார். அதன் பின்னர் இந்த பர்ஸ் யாருடையது என்பததைத் தேடிக் கண்டுபிடித்தும் விடுகின்றார். அந்த பர்ஸ் ஒரு பெண்ணினுடையது, அந்த பெண் காணாமல் போய் பல நாட்கள் ஆகின்றது. அந்த பெண் எப்படி காணாமல் போனார், ஏன் காணாமல் போனார் எனபது தான் மீதிக்கதை.

திரைக்கதை: பர்ஸ் யாருடையது எனத் தேடத் தொடங்கியதில் இருந்து, சின்னச் சின்ன ட்ரன் அண்ட் டிவிஸ்ட், ஆங்காங்கே காமெடி என படம் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், இந்தப் படத்தின் கதை வேறு ஒரு படத்தின் கதையைப் போல் உள்ளதே என்ற எண்ணம் வந்துவிட்டது. திரைக்கதை நகர்வைப் பார்க்கும்போது படம் அங்குதான் போய் நிற்குமோ என யூகிக்க முடிந்தது. அதேபோல் படமும் அங்கு போய் நின்றது. இந்தப் படத்தை விடவும் தமிழில் மிகச் சிறப்பான படமான பொம்மலாட்டம் வந்துள்ளது. சமீபத்தில் கூட திட்டம் இரண்டு என்ற படம் வந்தது. படத்தில் இருந்த சஸ்பென்ஸை படம் முடிவதற்கு முன்னதாகவே கூறிவிட்டார்கள். பொம்மலாட்டம், திட்டம் இரண்டு ஆகிய படங்களைப் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும்" என கூறியுள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











