விஜய்க்காக பல காலமாக காத்திருக்கும் பிரபல டைரக்டர்...தானே வெளியிட்ட ரகசியம்
சென்னை : மின்னலே படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். கடந்த 20 ஆண்டுகளாக பல ஹிட் படங்களை இயக்கி உள்ள இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் பல ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக ரஜினி, விஜய் பற்றி பேசிய விஷயங்களை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கவுதம் மேனன் தனது பேட்டியில், ரஜினி மற்றும் விஜய்க்காக என்னிடம் கதைகள் உள்ளன. துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் ரஜினியை தான் நடிக்க வைப்பதாக திட்டம். ஆனால் அது முடியாமல் போனது.
எமோஷனல் கதைகளில் நடிக்கவே தான் விரும்புவதாக ரஜினி கூறி விட்டார். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் போது சரியான கதையை தயார் செய்வேன்.
விஜய்யை வைத்து இசையுடன் காதல் கலந்த கதையை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. முழுமையான ஒரு கதையை தயார் செய்த பிறகு அவரிடம் பேச உள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications











