“ஓ மை கடவுளே“.. சிறப்புத் தோற்றத்தில் கௌதம் மேனன்!
சென்னை : ஓ மை கடவுளே படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த இடத்தில் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது.

இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்லும் படம் தான் "ஓ மை கடவுளே". இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர், புரமோ பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில்,
இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு இப்படம் குறித்து, சில தகவல்களை கூறினார். இப்படத்தில் சில காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குனர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.
சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குனர் அணுகி கதை பற்றியும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.
மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரும் விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்
இப்படம் காதலர் தினத்தன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு யூ.ஏ சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது. வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











